ஜெ. புறக்கணித்தார்.. நாங்களும் புறக்கணிக்கிறோம்: கருணாநிதி
சென்னை:
எதிர்க்கட்சித் தலைவர்களை ஜெயலலிதா மதிக்காததை உணர்த்தவே சட்டசபையை புறக்கணிப்பில் திமுக உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக முரசொலியில் திமுக தலைவர் கருணாநிதி எழுதியிருப்பதாவது:
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும் தேதியை சட்டமன்றஆய்வுக் குழு முன்பே தெரிவித்து விட்டது. இருப்பினும் விவாதம் நடந்த நாட்களின்போது ஜெயலலிதாவேண்டுமென்றே சபையில் இல்லை. எதிர்க் கட்சியினரின் வாதத்தைக் கேட்காமல் அவர் புறக்கணித்தார். வெளியூர்போய்விட்டார்.
ஜெயலலிதாவின் அப்பட்டமான அகம்பாவத்தையே இது காட்டுகிறது. இதை மக்களுக்கும், அரசுக்கும்உணர்த்தவே, பட்ஜெட் மற்றும் துணை மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும்போது அவையைப்புறக்கணிக்க முடிவு செய்தோம்.
அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் படாதபாடு படுத்திவிட்டு இப்போது கருணை காட்டுவது போலநாடகமாடுகிறார் ஜெயலலிதா. இதை அரசு ஊழியர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலின்போது ரூ. 9 ஆக இருந்த ரேஷன் அரிசி விலையை ரூ. 3.50 குறைத்து விட்டு,தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ரூ. 6 ஆக ஜெயலலிதா அதிகரித்ததை நாடும் மக்களும் மறந்து விடவில்லை.
வைகோ, நெடுமாறன் போன்றோர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டபோது அதை எதிர்த்து அப்பீல் செய்ததன்மூலம் தனது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திவிட்டார் ஜெயலலிதா.
சேடியில்லாத ராஜகுமாரி என்று அறிஞர் அண்ணா எழுதிய உவமை போல் இது விவாதமே இல்லாத பட்ஜெட்.பட்ஜெட்டா இது? மக்களவைத் தேர்தலுக்காக ஒரு ஏமாற்று அறிக்கை. ஓடும் குதிரையின் முன் கட்டப்படும்கொள்ளுப்பை என்று கடுமையாக விமர்சித்துள்ளார் கருணாநிதி.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications