கோலார் தங்க சுரங்க தொழிலாளர் விவகாரம்: மம்தா பானர்ஜிக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை:
கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டதால் வேலைவாய்ப்பை இழந்த சுமார் 4,000 தமிழக தொழிலாளர்களுக்குஉரிய நிவாரணம் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு இன்று கடிதம்அனுப்பியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில், கோலார் தங்க வயலில் வேலை செய்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். வேலை வாய்ப்பை இழந்த இவர்களுக்கு நிவாரணம் வழங்கபல பரிந்துரைகளை கர்நாடக உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.5,000 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளை சலுகை விலையில் அவர்களுக்கே ஒதுக்கித் தர வேண்டும் என்றும்,விருப்ப ஓய்வு திட்டத்தின்கீழ் சென்றவர்களுக்கும் இந்த சலுகையை அளிக்க வேண்டும் என்றும்,
கோலார் தங்க வயலுக்குச் சொந்தமான நிலங்களை பாதிக்கப்பட்டவர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம்பயன்படுத்திக் கொள்ள ஆவண செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்தப் பரிந்துரைகள் வந்து4 மாதங்களாகியும் இதுவரை எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை.
இது குறித்து மத்திய சுரங்கத் துறை இணை அமைச்சருக்கு கடந்த நவம்பர் 21ம் தேதி ஒரு கடிதம்அனுப்பியிருந்தேன்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 25 வருடங்கள் கோலாரில் பணிபுரிந்தவர்கள். அவர்கள் இனி வேறுவேலைக்குச் செல்வது சாத்தியமில்லை. எனவே இது குறித்து நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று குறிப்பிட்டுள்ளார்.
-
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications