வைகோவை சந்தித்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்றுஅதிகாலை சந்தித்தார்.
அந்தமான் தலைநகரான போர்ட் பிளேயர் செல்வதற்காக இன்று அதிகாலை 1.45க்கு பெர்னாண்டஸ் சென்னைவந்தார். விமான நிலையத்திலிருந்து வைகோவின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தார்.
அப்போது உணர்ச்சிப் பெருக்கில் தலைவர்கள் இருவரும் ஒருவரைக் கட்டிக் கொண்டனர். வைகோபெர்னாண்டஸூக்கு சால்வை போர்த்தினார். வைகோவின் உடல் நலம் குறித்து பெர்னாண்டஸ் விசாரித்தார்.ஜாமீனில் விடுதலையானதற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
இருவரும் சுமார் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் 5.30 மணிக்கு பெர்னாண்டஸ் போர்ட்பிளேயர் புறப்பட்டுச் சென்றார். வைகோ சிறையில் இருந்து விடுதலையானதும் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்த்துத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நாளை அறிவிக்கிறார்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் மதிமுகவுக்கு சிவகாசி, வந்தவாசி, திருச்சி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளன. இத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவர்கள் கடந்த 9, 10 தேதிகளில் தங்களது மனுக்களைதாக்கல் செய்தனர்.
வைகோ தலைமையில் வேட்பாளர் நேர்காணல் 11, 12 தேதிகளில் நடந்தது. இந் நிலையில் மதிமுக அவைத்தலைவர் எல்.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:
இன்று மாலை கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதன் பின்னர் நாளை கட்சியின்செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதிய நிர்வாகிகளை வைகோ அறிவிப்பார். அப்போதுவேட்பாளர்களின் பெயர்கள் ஒப்புதல் பெறப்படுகிறது. அதன் பின்னர் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
19ம் தேதி அண்ணா நகரில் கட்சியின் நிதியளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசுகிறார். 28ம் தேதிஅவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டி செல்கிறார். தேர்தல் பிரச்சார பயணத் திட்டம் குறித்து திமுக தலைவர்கருணாநிதியுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றார்.
வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது என்றாலும், எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவது என்பதுஏறத்தாழ முடிவாகிவிட்டது என்று மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவகாசியில் வைகோவும், திருச்சியில் எல்.கணேசனும் போட்டியிடுவார்கள் என்றும், வந்தவாசியில் முன்னாள்மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனும், பொள்ளாச்சித் தொகுதியில் டாக்டர் கிருஷ்ணனும் நிறுத்தப்படலாம்என்றும் கூறப்படுகிறது.
இதனால் முன்னாள் அமைச்சரும் பொருளாளருமான கண்ணப்பனுக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப்பில்லாமல்போய்விட்டது.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications