தமிழகத்தில் மேலும் பல லட்சம் போலி வாக்களர்கள்
சென்னை:
தமிழகத்தில் பல லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால் அது குறித்து தலைமைத் தேர்தல்கமிஷன் அதிகாரிகள இன்று முதல் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு நடத்த உள்ளனர்.
தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள 14 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, கன்னியாகுமரிமாவட்டம் குளச்சல் ஆகிய தொகுதகிளில் அதிக அளவு போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக உள்ளிட்ட கட்சிகள்புகார் தெரிவித்தன.
இதையடுத்து இந்தத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் ஆணையர் உத்தரவுப்படி மறு ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது. உசிலம்பட்டி தொகுதியில் சேர்க்கப்பட்டிருந்த 23,000 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இதே போல மேலும் பல மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சிகள்ஆதாரங்களுடன் புகார் தந்துள்ளதால் அது குறித்து ஆய்வுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து விவாதிக்க மத்திய தேர்தல் ஆணைய அதிகாரி ராவ் இன்று சென்னை வந்தார். தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிமிருத்யுஞ்சய் சாரங்கியுடன் அவர் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் அதிக அளவில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்து முக்கிய விவாதம் நடந்ததாகத் தெரிகிறது. ராவ்நாளை மதுரை செல்கிறார். அங்கு மாவட்ட ஆட்சித் தலைவருடன் உசிலம்பட்டி குறித்து விவாதிக்கவுள்ளார். பின்னர் அவர் கரூர்உள்ளிட்ட மாவட்டங்களிலும் மூன்று நாட்கள் ஆய்வு நடத்துகிறார்.
அதே போல வரும் 23ம் தேதி தலைமைத் தேர்தல் அதிகாரிகளில் ஒருவரான டாண்டனும் தமிழகத்தில் ஆய்வு நடத்த உள்ளார்.
இதற்கிடையே இன்று திருச்சி வந்த இனனொரு தலைமைத் தேர்தல் அதிகாரியான கோபால்சுவாமி நிருபர்களைச் சந்தித்தார். அவர்கூறுகையில், மக்களவைத் தேர்தல் தேதி குறித்து பிப்ரவரி இறுதி வாரத்தில் முடிவு செய்யப்படும்.
பள்ளி, கல்லூரித் தேர்வுகள் பாதிக்கப்படாத வகையில் தேர்தல் நடத்தப்படும். அதன்படி பார்த்தால் ஏப்ரல் 15ம் தேதிக்குமேல்தான் நாடு முழுவதும் தேர்வுகள் முடிகின்றன. எனவே ஏப்ரல் 15ம் தேதிக்கு மேல்தான் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 தொகுதிகளில் மக்கள்தொகையை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது என்றார் அவர்.
இப்போதைய 3 தேர்தல் கமிஷ்னர்களில் டாண்டன் தவிர தலைமைத் தேர்தல் கமிஷ்னரான கிருஷ்ணமூர்த்தியும், கமிஷ்னரானகோபால்சாமியும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கிருஷ்ணமூர்த்தி தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலிமாறனாவார். இதனால் தான் அவரை தலைமைத் தேர்தல் கமிஷ்னராக்க பா.ஜ.க. பலமுறை யோசித்தது. மத்திய உள்துறைச்செயலாளராக இருந்த கோபால்சாமியை தேர்தல் கமிஷ்னராக நியமித்தது துணைப் பிரதமர் அத்வானியாவார்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்











Click it and Unblock the Notifications