வெங்கைய்யாவுடன் திருமாவளவன்- கிருஷ்ணசாமி சந்திப்பு
டெல்லி:
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், மக்கள் தமிழ்த் தேசம் கட்சியின் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் டெல்லியில்பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுவைச் சந்தித்துப் பேசினர்.
திமுக கூட்டணியில் இடம் தரப்படாததால் தனியாக மூன்றாவது அணியை அமைத்துள்ள இவர்கள் அதில் மற்றகட்சிகளையும் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி இழுபறியில் உள்ள பா.ஜ.கவையும் தங்களது அணிக்குள் இழுக்கும்திட்டத்துடன் அவர்கள் நாயுடுவைச் சந்தித்தனர்.
ஆனால், அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும் தொகுதிப் பங்கீடு பிரச்சனை தான் இருப்பதாகவும்கூறிய நாயுடு இவர்களது அணியில் சேர ஆர்வம் காட்டவில்லை. வருங்காலத்தில் நாம் இணைந்து செயல்படக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டால் நிச்சயம் சேருவோம் என்ற உறுதிமொழியை மட்டும் தந்து திருப்பி அனுப்பிவிட்டார்.
பா.ஜ.கவுடன் திமுக கூட்டணி வைத்திருந்ததை வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் எதிர்த்தவர் திருமாவளவன்.பா.ஜ.க வருணாசிரம தர்மத்தை ஆதரிக்கும் கட்சி என்றும் தாக்கியுள்ளார். அவர் போய் பா.ஜ.கவுடன் கூட்டணிசேர முயன்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications