தினகரனுக்கு புதுக்கோட்டை: சசிக்கு பெரியகுளம்?- ஜெவுக்கு திருநாவுக்கரசர் சாபம்
டெல்லி:
புதுக்கோட்டை தொகுதியில் என்னை போட்டியிட விடாமல் செய்துவிட்டதால், யாராவது (முதல்வர் ஜெயலலிதா)மகிழ்ச்சியடைவார்களேயானால், அது தாற்காலிகமான மகிழ்ச்சியாகத் தான் இருக்கும் என மத்திய அமைச்சர்திருநாவுக்கரசர் மனம் நொந்துபோய் கூறினார்.
திருநாவுக்கரசர் மனம் வருந்திப் பேசியதையடுத்து அவருக்கு ராஜ்யசபாவில் நிச்சயமாக இடம் வழங்கப்படும் எனபாஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு இன்று அறிவித்தார். அவரைச் சமாதானப்படுத்தும் வகையில் பிரதமர்வாஜ்பாயுடன் அவரை இன்று சந்திக்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதே போல பா.ஜ.கவின் தென்மாநில தேர்தல் பணிக் குழுவிலும் திருநாவுக்கரசருக்கு இடம் தரப்படுகிறது.
பா.ஜ.கவுக்கு அதிமுக புதுக்கோட்டை தொகுதியை வழங்காதது குறித்து முதலில், இதில் எனக்கு மன வருத்தம் ஏதும்இல்லை. பா.ஜ.க. தலைமையின் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்று கூறிய திருநாவுக்கரசர் பின்னர் டெல்லி தமிழ்டிவி நிருபர்களை அழைத்து காட்டமாக பேட்டி தந்தார். அப்போது புதுக்கோட்டை தனக்குக் கிடைக்காமல் போனதுகுறித்து மன வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
அவர் கூறியதாவது:
நேற்று நடந்தது நன்றாகவே நடந்தது. நாளையும் நல்லதாகவே நடக்கும். கடந்த 27 வருட அரசியல் வாழ்வில்நான் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்ததோ, விரோதம் பாராட்டியதோ கிடையாது.
எனக்கு புதுக்கோட்டை தொகுதி கிடைக்காமல் செய்துவிட்டதால் யாராவது மகிழ்ச்சியடைவார்களேயானால் அதுதாற்காலிகமாக மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். அது நீண்ட நாள் நீடிக்காது.
புதுக்கோட்டை தொகுதி மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் பொதுச் சேவை செய்வதை யாராலும் தடுத்துவிடமுடியாது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க. தலைமை எனக்கு என்ன வேலை கொடுக்கிறதோ அதைச் செய்வேன். என்னைஅரசியலில் இருந்து யாராலும் அழித்துவிட முடியாது.
எனக்காக பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு ஆகியோர்புதுக்கோட்டை தொகுதியைக் கேட்டு அதிமுகவிடம் போராடிப் பார்த்தார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி.எனக்கு ராஜ்யசபா சீட் தருவதாக பா.ஜ.க. தலைமை இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லைஎன்றார் திருநாவுக்கரசர். (இதையடுத்தே ராஜ்யசபா சீட் உறுதிமொழி தரப்பட்டது)
இந் நிலையில் புதுக்கோட்டையில் சுயேச்சையாகப் போட்டியிடக் கோரி திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் சுமார்2,000 பேர் அவருக்கு தந்திகளை அனுப்பியுள்ளனர். மேலும் அவரை தொலைபேசியிலும் தொடர்பு கொண்டுதனித்து நிற்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே புதுக்கோட்டை தொகுதியில் சசிகலாவின் அக்காள் மகனும் பெரியகுளம் எம்.பியுமான தினகரனைநிறுத்த ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. பெரியகுளத்தில் சசிகலாவையே நிறுத்தவும் கூட அவர்திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் புதுக்கோட்டையில் அவர்களது வாக்குகளை அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்றவகையிலும் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாகவும் அள்ளியவர் திருநாவுக்கரசர். அவருக்கு சீட் கிடைக்காமல்செய்ததால் அதிமுக மீது கோபத்தில் உள்ள அப் பகுதி முக்குலத்தோரை சமாதானப்படுத்தும் வகையிலேயே அதேசமூகத்தைச் சேர்ந்த தினகரனை நிறுத்தவுள்ளாராம் ஜெயலலிதா.
அதே போல இதுவரை பின்னணியில் இருந்து அரசியல் செய்து வரும் சசிகலா நேரடியாகக் களத்தில் குதித்துபெரியகுளத்தில் போட்டியிடப் போகிறார் என்ற பேச்சு அப் பகுதி அதிமுகவினர் மத்தியில் பரவிக் கிடக்கிறது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications