திருமாவளவன்- கிருஷ்ணசாமி கூட்டணி 20 தொகுதிகளில் போட்டி
சென்னை:
ஐக்கிய ஜனதா தளத்தின் அம்பு சின்னத்தின் கீழ் 20 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடப் போவதாகதிருமாவளன், டாக்டர் கிருஷ்ணசாமி, எஸ்.கண்ணப்பன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
தலித் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் மற்றும் பிற்பட்ட வகுப்பான கோனார் சமூகத்தைச்சேர்ந்த கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் ஆகிய மூன்று கட்சிகளும் சேர்ந்து புதிய கூட்டணியைஅமைத்துள்ளன.
இந்த மூன்று கட்சிகளும், ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்து மக்கள் கூட்டணி என்ற பெயரில் தமிழகதேர்தல் களத்தில் குதித்துள்ளன.
இந்தக் கூட்டணியின் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, கண்ணப்பன் ஆகியோர்சென்னையில் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.
திருமாவளவன் கூறுகையில், இது மூன்றாவது அணி அல்ல. திமுக, அதிமுகவுக்கு மாற்றான வலுவான அணி. திமுக,அதிமுகவை வீழ்த்தவே நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். அந்தக் கட்சிகளிடம் எங்களுக்கு இடம்கிடைக்காதால்தான் இந்தக் கூட்டணியை ஆரம்பித்ததாக கூறுவது தவறு.
சமூகத்தில் மிகவும் கீழ் நிலையில் உள்ள மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கச் செய்யவே இந்தத் தேர்தலில்நாங்கள் போட்டியிடுகிறோம். தலித் மக்களின் வாக்குகளைப் பெற்று 2001ல் வெற்றி பெற்றது திமுக. ஆனால்அதை மறந்து விட்டு சந்தர்ப்பவாதி ராமதாஸுடன் கை கோர்த்திருக்கிறார் கருணாநிதி.
முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் தலித் மக்களை பிச்சைக்காரர்கள் போலவே பாவிக்கிறார்கள். ஆனால் மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் தலித்துகள் என்பதை இந்த சுய நல அரசியல்வாதிகள் மறந்து விட்டார்கள்.
இவர்களுக்கு இந்தத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவோம். திமுகவைச் சேர்ந்த பரிதி இளம்வழுதி ஒருதலித்தான். ஆனால் என்றைக்காவது தலித் மக்களின் பிரச்சனை குறித்து அவர் சட்டசபையில் பேசியிருக்கிறாரா?அதை அவரது கட்சிதான் அனுமதித்திருக்கிறதா?
நாங்கள் பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்தது உண்மைதான். அதை மறைக்கவில்லை. ஆனால்அரசியலுக்காக அவரை சந்திக்கவில்லை. நட்புரீதியாக சந்தித்தோம் என்றார் திருமாவளவன்.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு












Click it and Unblock the Notifications