தேர்தல் பயம் வந்தாச்சு: கோவில்களில் பலியிட தடை நீக்கம்- அந்தர் பல்டி அடித்தார் ஜெயலலிதா
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையடுத்து, கோவில்களில் ஆடு, கோழிகள் உள்ளிட்ட விலங்குகளைப்பலியிடத் தடை செய்யும் சட்டத்தை நீக்கி தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போல ரேசன்அட்டைகளைப் புதுப்பித்துக் கொள்ளகால அவகாசத்தையும் அரசு திடீரென நீட்டத்துள்ளது.
கடந்த 1950ம் ஆண்டு கோவில்களில் விலங்குகளைப் பலியிட தடைசெய்து சட்டம் பிறப்பிக்கப்பட்டது. நீண்டகாலமாக அமலில் இருந்து வந்த சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாமல் இருந்து வந்தது.
இந் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்தச் சட்டத்தை தூசி தட்டிஎடுத்த தமிழக அரசு அவசர அவசரமாகஅமல்படுத்தத் தொடங்கியது. இதற்குக் காரணமாக பெரிய வியாக்கியானமே பேசினார் முதல்வர் ஜெயலலிதா.
இதனால் நேர்த்திக் கடன் வைத்து கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிட்டு, பொங்கல் வைத்து வந்தலட்சக்கணக்கானோர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். குறிப்பாக தென் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
ஆனால், போலீசாரை வைத்து ஆடு, கோழிகளைக் காப்பாற்றி வந்தார் ஜெயலலிதா. மீறி வெட்டிய பூசாரிகள்,பக்தர்கள் கைது செய்யப்பட்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேசன் அட்டைகள்:
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ள இன்னொரு உத்தரவில் ரேசன் அட்டைகளைப் புதுப்பிக்க காலஅவகாசத்தை நீட்டித்துள்ளார். இதற்கு கடந்த டிசம்பர் 31ம் தேதி தான் கடைசி நாளாக இருந்தது. ஆனால்,ஆயிரக்கணக்கானோர் ரேசன் அட்டையை அந்தக் கெடுவுக்குள் புதுப்பிக்கவில்லை.
இதனால் அந்த அட்டைகள் செல்லாதவையாக மாற இருந்தன. இந் நிலையில் அவற்றை மார்ச் 31 வரைபுதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் ரேசன் அட்டைகளைசெல்லாதவையாக்கினால் அதிமுகவுக்கு பிரச்சனை வரலாம் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக்கருதப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வர, வர அதிமுகவுக்கு பயமும் அதிகரித்துக் கொண்டே வருவதையே இச்செயல்கள் காட்டுகின்றன.
முதலில் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் விஷயத்தில் பல்டி அடித்த அதிமுக அரசு. அடுத்ததாக விவசாயிகளுக்குஇலவச மின்சாரத்துக்கு மானியத்தைக் கூட்டி அந்த விஷயத்திலும் அந்தர் பல்டி அடித்தது. இப்போது பலியிடத்தடை விதிக்கும் சட்டத்தையும் வாபஸ் பெற்றுவிட்டது. ரேசன் கார்ட்கள் விஷயத்திலும் விட்டுக் கொடுத்துநடந்துள்ளது.
தேர்தல் தேதி இன்னும் நெருங்கும்போது மக்களுக்கு மேலும் பல நன்மைகள் நடக்கலாம்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications