அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலையில் நண்பர் கைது
வாஷிங்டன்:
கடந்த டிசம்பரில் அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக குடியிருப்பு வளாகத்தில் இந்திய மாணவர்மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குப் பின் சுதீரைக் காணவில்லை. இதையடுத்து பிரவீன் வேதம்என்பவர் உள்ளிட்ட சுதீரின் நண்பர்கள், அவரது வீட்டைத் திறந்து சோதனையிடுமாறு பல்கலைக்கழகஅதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து சுதீரின் வீட்டை ஜனவரி 4ம் தேதி அதிகாரிகள் உடைத்து சோதனையிட்டபோது அவர்படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடலில் 30 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டகாயங்கள் இருந்தன.
சுதீரின் வீட்டிலிருந்த லேப்டாப், ஹோம் தியேட்டர் சிஸ்டம், விசிடி பிளேயர், டிவிடி பிளேயர் முதலானபொருட்களையும் காணவில்லை.
அதே நேரத்தில் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே யாரும் நுழைந்ததற்கான எந்த ஒரு அறிகுறியும்இல்லாமல் இருந்தது. இதனால் சுதீருக்கு மிக நெருக்கமான யாரோ தான் இந்தக் கொலையை செய்திருக்கவேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர்.
இந் நிலையில் பிரவீன் வேதம் என்ற அவரது நண்பரின் அலுவலகத்தில் சுதீரின் லேப்டாப் இருந்ததை போலீசார்கண்டுபிடித்தனர். இதையடுத்து லேப்டாப்பைத் திருடியதாக போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைதுசெய்தனர். இப்போது கொலையையும் அவர் தான் செய்ததாக வழக்குப் போடப்பட்டுள்ளது.
பிரவீன் வேதமும் முன்னாள் புளோரிடா பல்கலைக்கழக மாணவர் தான். சுதீருடன் முன்பு ஒரே அறையில்தங்கியிருந்தவர். மேலும சுதீரைக் காணவில்லை என அதிகாரிகளுக்குத் தகவல் தந்தவர்களில் முக்கியமானவர்இவர் தான். இது தவிர சுதீரின் இறுதிச் சடங்கையும் இவர் தான் முன்னின்று நடத்தினார் எனபதும்குறிப்பிடத்தக்கது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications