தொடர்கிறது பாண்டிச்சேரி சிக்கல்: மசிய மறுக்கும் ராமதாஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பதிலுக்காக அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து காத்திருக்கிறார்கள்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு புதுவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களது வெற்றிக்கோட்டையை, அட்ரஸே இல்லாத பாமகவுக்கு திமுக தூக்கி கொடுத்துவிட்டதால் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்புதுவை காங்கிரஸார்.
புதுவையில் காங்கிரஸ் தான் போட்டியிட வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். சென்னை வந்தசோனியா இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியுடன் பேசினார். இதைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர்டாக்டர் ராமதாசுடன் கருணாநிதி கட்டப் பஞ்சாயத்து நடத்திப் பார்த்தார்.
ஆனால், ராமதாஸ் மசியவில்லை. பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன்செயல்பட்டு வரும் ராமதாஸ், அந்தத் தொகுதியிலும தோற்றாலும் கூட பரவாயில்லை, அதை காங்கிரசுக்கு விட்டுத்தர மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இதை சோனியாவிடம் கருணாநிதி தொலைபேசி மூலம் தெரிவித்துவிட்டார். மேலும் இந்த விஷயத்தில் காங்கிரஸ்என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம், திமுக அதில் தலையிடாது என்றும் தெளிவுபடுத்திவிட்டார்.
இதற்கிடையே பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி, தற்போதைய எம்.பியான எம்.ஓ.எச்.பாரூக்ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு தொடர்ந்து சோனியாவை நச்சரித்து வருகின்றனர்.
இதையடுத்து திண்டிவனம் ராமமூர்த்தி போன்ற வன்னிய இனத் தலைவர்கள் மூலம் ராமதாசிடம் சோனியா பேசிவருகிறார்.
இந்த முயற்சிகளும் பலனளிக்காவிட்டால் தான் சோனியா இறுதி முடிவெடுப்பார் என்று தெரிகிறது.
புதுவையை எங்களுக்குக் கொடுத்துவிட்டால், தனித்தே போட்டியிட்டு பாமகவை மண் கவ்வச் செய்வோம் என்றுகூறும் காங்கிரஸ் தலைவர்கள். இந்தத் தொகுதியில் பலமில்லாத பா.ஜ.க. நிற்பதால் தங்களுக்கு வெற்றி உறுதி என்றுசொல்லி சோனியாவை மனமிறஙக வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications