என் வீட்டில் இருந்த ரூ. 1.4 கோடி ஜமீன்தாரின் பணம்: ஜனனி போடும் புதிய குண்டு!
மதுரை:
தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ. 1.4 கோடி பணம் ஒரு ஜமீன்தாருக்குச் சொந்தமானது என்று ஜனனிகூறியுள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நெருக்கமாக இருந்ததால் கஞ்சா வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டவர்ஜனனி. அப்போது அவரது மதுரை, சென்னை பங்களாவில் (நடராஜன் வாங்கித் தந்தது) இருந்து ரூ. 1.4 கோடிபணமும் ஏராளமான நகைகளும் போலீசாரால் கைப்பற்றப்பட்டன. ஒரு மிட்சுபிஸ் லேன்சர் காரும் பறிமுதல்செய்யப்பட்டது.
(கைப்பற்றப்பட்டது மேலும் அதிகமான பணம், நகைகள் என்றும் அதில் பெரும்பாலான நகைகள் சசி கும்பலிடம்தரப்பட்டுவிட்டதாக ஜனனி தரப்பு இலைமறை காயாகக் கூறுகிறது).
கார், நகைகள், பணத்துடன் 40 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றியதாக போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.
நான் கஞ்சாவையே பார்த்ததில்லை, இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று கூறும் ஜனனி, இந்தவழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா ஸ்டைலில் ஒரு மனுவைஉச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதன் மீது வரும் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் பல்வேறு மர்மங்கள் இருந்து வரும் நிலையில் இப்போது இன்னொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.வழக்கை பின்னால் இருந்து நடத்தி வருவதே நடராஜன் தான் என்ற சந்தேகம் பரவலாகவே உள்ளது.
இந் நிலையில் ஜனனியின் வழக்கறிஞரான சங்கர பாண்டியன் (இவர் வரும் எம்.பி. தேர்தலில் மதுரையில் அதிமுகசார்பில் போட்டியிட மனு செய்துள்ளார்) மதுரை போதைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜனனியின் சார்பில் ஒருமனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஜனனி கூறியிருப்பதாவது:
என் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ. 1.4 கோடி பணம் என்னுடையது அல்ல. அது கடம்பூர் ஜமீந்தார் ஜெகதீஸ்வரராஜாமற்றும் டெல்லியைச் சேர்ந்த ஆடிட்டர் ரவி சோப்ராவுக்குச் சொந்தமானது. இதனால் அந்தப் பணத்தைஅவர்களிடம் ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் என் கார், நகைகளை என்னிடம் திருப்பித் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவைநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த ஜமீன்தார், ஆடிட்டர் ஆகியோரையும் செட்-அப் செய்தது நடராஜன் தரப்பு தான் என்று போலீசார்சந்தேகிக்கின்றனர்.
ஜனனி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கு கணக்கு, வழக்கு இல்லாததால் அதை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வருமான வரித்துறையும் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனனி விஷயத்தில் எல்லாமே மர்மம் தான் !!
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications