நிபந்தனையை ஏற்றது பா.ஜ.க: ஜெயா டிவியின் நியூஸ் சேனலுக்கு மத்திய அரசு அனுமதி
டெல்லி:
பா.ஜ.கவுடன் கூட்டணிக்கு முதல்வர் ஜெயலலிதா விதித்த மிக முக்கிய நிபந்தனைகளில் ஒன்றை மத்திய அரசுநிறைவேற்றித் தந்துள்ளது.
ஜெயா டிவியின் சார்பில் நியூஸ் சேனல் ஆரம்பிக்க அனுமதிக்கக் கோரி இரு ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசிடம்அனுமதி கோரப்பட்டது. ஆனால், ஜெயா டிவியின் நிர்வாக இயக்குனராக இருந்த பெரியகுளம் எம்.பியும்சசிகலாவின் அக்காள் மகனுமான டி.டி.வி. தினகரன் மீது அன்னியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணையில்உள்ளது.
இதனைச் சுட்டிக் காட்டிய உள்துறை அமைச்சக அதிகாரிகள், நியூஸ் சேனல் தொடங்க ஜெயா டிவிக்கு அனுமதிமறுத்தனர்.
இதையடுத்து நியூஸ் சேனல் அனுமதிக்கு இடைஞ்சலாக மத்திய அரசால் சுட்டிக் காட்டப்பட்ட தினகரன் ஜெயாடிவியின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து கடந்த அக்டோபரில் விலகிக் கொண்டார். அந்த இடத்தில் அவரதுமனைவி அனுராதாவை ஜெயலலிதா நியமித்தார்.
ஆனாலும் ஜெயா டிவிக்கு நியூஸ் சேனல் தொடங்க அனுமதி தரப்படவில்லை. இது குறித்து துணைப் பிரதமர்அத்வானியுடன் ஜெயலலிதா எவ்வளவோ முறை பேசியபோதும், கூட்டணியில் திமுக இருந்ததால் அவரதுகோரிக்கையை மத்திய அரசு தட்டிக் கழித்து வந்தது.
இதற்கிடையே அதிமுகவுடன் கூட்டணியை விட்டால் வேறு வழி இல்லை என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்ட பா.ஜ.கசார்பில் ஜெயலலிதாவை அத்வானி சந்தித்தார். அப்போது பல நிபந்தனைகளை ஜெயலலிதா விதித்ததாகக்கூறப்பட்டது.
அதில் முக்கியமானது ஜெயா நியூஸ் சேனலுக்கான அனுமதி. இப்போது இதற்கான அனுமதியை மத்திய அரசுவழஙகிவிட்டதாக டெல்லி தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் சேலை வினியோகம் துவக்கம்:
இதற்கிடையே ஜெயலலிதா அரசால் சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் இன்றுமீண்டும் துவக்கப்பட்டது.
தேர்தல் வருவதையொட்டி பலியிடத் தடை நீக்கம், விவசாயிகளுக்கு மின்சாரத்துக்கு மானியம், அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் நீக்கம் ஆகியசலுகைகளை அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டமும் இன்று முதல்தொடங்கப்பட்டுள்ளது.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications