தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல்: அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்
சென்னை:
தமிழகம் முழுமைக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்குமாறு அனைத்துக் கட்சியினரும் தேர்தல்ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இன்று சென்னையில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன்ஆலோசனைக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.
மத்திய தேர்தல் ஆணைய மூத்த அதிகாரியான பி.பி. டாண்டன், நேற்று முன்தினம் பாண்டிச்சேரியில் அனைத்துக்கட்சித் தலைவர்கள், மாநிலத் தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருடன் ஆலோசனைநடத்தினார். அப்போது தமிழகத்துடன் சேர்த்தே பாண்டிச்சேரியிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அவர் முடிவுசெய்தார்.
இதனையடுத்து இன்று சென்னையில் அவர் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆளுநர் மாளிகையில்ஆலோசனை நடத்தினார்.
அதிமுக சார்பில் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், திமுக சார்பில் விடுதலை விரும்பி, காங்கிரஸ் சார்பில்ஞானதேசிகன், திண்டிவனம் ராமமூர்த்தி, பாமக சார்பில் ஜி.கே.மணி, பா.ஜ.க. சார்பில் குமாரவேலு, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் சார்பில் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முதலில் கூட்டாகவும் பின்னர் ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதிகளுடனும் தேர்தல் ஆணையர் டாண்டன்தனித்தனியாக ஆலோசனை நடத்தி அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
அப்போது, ஒரே நாளில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் வலியுறுத்தினர். குறிப்பாக தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுக இந்தக் கோரிக்கையைஅதிகமாக வலியுறுத்தியது. அதிமுக இந்த மக்களவைத் தேர்தலில் 33 தொகுதிகளில் போட்டியிடுவதுகுறிப்பிடத்தக்கது.
மேலும், 3 தொகுதிகளில் மட்டும் தற்போது போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதை தமிழகத்தில் உள்ள234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தி போலி வாக்காளர்களைக் களைய வேண்டும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சாரதி, தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியில் இடம் பெற்றுள்ளகட்சி, தேர்தலுக்குப் பின்பு வேறொரு கூட்டணிக்கு மாறுவத்ை தடை செய்ய வேண்டும் என்றும், தனியார்தொலைக்காட்சிகள் ஒரு குறிப்பிட்ட கட்சியின் பிரச்சார சாதனமாகப் பயன்படுத்தப்படுவதைத் தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
நாளை 30 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்டக் கலெக்டர்கள்) டாண்டன் ஆலோசனை நடத்துகிறார்.அனைத்துக் கட்சிகளுடனான இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிமிருத்யுஞ்சய் சாரங்கியும் கலந்து கொண்டார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை விரும்பி, இடைத்தேர்தலில் நடைபெற்றது போன்றமுறைகேடுகளைத் தடுக்க, சட்டம் ஒழுங்கை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்றும், பாதுகாப்புக்கு மத்தியதுணை ராணுவம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் திமுக சார்பில் கோரிக்கை விடுத்தோம் என்றார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications