புதுவை: இன்னும் நம்பிக்கையுடன் காங்கிரஸ்!
சென்னை:
பாண்டிச்சேரி தொகுதியில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கட்சி இன்னும் நம்பிக்கையுடன் உள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.கவுக்கு புதுவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதனால் அதே கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
பல காலமாக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் தங்களை விட்டு விட்டு சம்பந்தமே இல்லாமல் பா.ம.கவுக்குத்தொகுதியைக் கொடுப்பதா என்று அவர்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் பாண்டிச்சேரி முடிந்து போன விவகாரம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸும், திமுக தலைவர்கருணாநிதியும் பல முறை கூறி விட்டனர். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அதை ஏற்கவில்லை. பாண்டிச்சேரியில்நாங்கள் போட்டியிடுவது உறுதி என்று கூறி வருகிறார்கள்.
இந் நிலையில் சென்னை வந்த காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தல்ஜீத் சிங்கும் பாண்டிச்சேரி தொடர்பானஅம்மாநில காங்கிரஸாரின் நம்பிக்கையை அதிகப்படுத்தும் விதத்தில் சில கருத்துக்களைக் கூறினார்.
செய்தியாளர்களிடம் தல்ஜீத் சிங் பேசுகையில், பாண்டிச்சேரி தொடர்பாக தற்போதைக்கு அமைதி காக்கவிரும்புகிறோம். இது தொடர்பாக கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும்.
பாண்டிச்சேரியில் திமுகவுடன் கூட்டணி இருக்குமா, இருக்காதா என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது.பாண்டிச்சேரி தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தமிழகத்தில் காங்கிஸ் போட்டியிடவுள்ள 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் முழுமையாக முடிந்துவிட்டது. வேட்பாளர் பட்டியல் விரைவில் இறுதி செய்யப்படும் என்றார் அவர்.
இதற்கிடையே, பாண்டிச்சேரி தொகுதியில் தங்களது வேட்பாளருக்கு ஒத்துழைப்பு தரும்படி பாண்டிச்சேரி மாநிலபா.ம.கவினர், காங்கிரஸ் தலைவர்களுக்கு தூது விடத் தொடங்கியுள்ளனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications