வைகோவை சந்தித்தார் இளங்கோவன்
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் இளங்கோவன் சந்தித்துப்பேசினார்.
இந்த சந்திப்பு வைகோவின் இல்லத்தில் நடந்தது. அப்போது வைகோவின் உடல்நலம் குறித்து இளங்கோவன் விசாரித்தார்.இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள். இதனையடுத்து இளங்கோவன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைசந்திக்க டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வைகோவிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். சோனியா காந்தியை சந்திக்கும்போது தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறுவைகோ கூறினார். இதை சோனியாவிடம் நான் தெரிவிப்பேன்.
வைகோவுடன் சோனியா ஒரே மேடையில் தோன்றுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. சோனியாவின் தமிழக தேர்தல் பிரச்சாரத்திட்டம் இன்னும் தயாராகவில்லை. கோபிச்செட்டிபாளையத்தில் போட்டியிட காங்கிரஸ் தலைமை அனுமதித்தால் நிச்சயம்போட்டியிடுவேன் என்றார்.
நாளை சொந்த ஊர் செல்கிறார் வைகோ:
19 மாத சிறைவாசத்துக்குப் பின் வைகோ முதன்முறையாக நாளை தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டி செல்கிறார். பாண்டியன்எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து கார் மூலம் கலிங்கப்பட்டி செல்கிறார். அவருக்கு வழி நெடுகிலும் சிறப்பானவரவேற்பு அளிக்க மதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கலிங்கப்பட்டியில் 28ம் தேதி நடைபெறவிருக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோசிறப்புரையாற்றுகிறார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications