பழம்பெரும் நடிகைக்கு முதல்வர் ரூ. 10 லட்சம் நிதியுதவி
சென்னை:
பழம் பெரும் நடிகை தஞ்சை சரஸ்வதிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது தமிழக அரசு. இதுதொடர்பான அறிவிப்பைமுதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
கே.ஆர்.ராமசாமி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரோடு நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து தனது கலையுலகவாழ்க்கையை ஆரம்பித்தவர் தஞ்சை சரஸ்வதி. அதன் பின்னர் தியாகராஜ பாகவதர், அசோக் குமார் ஆகியோரோடுதிரைப்படங்களில் நடித்துள்ளார்.
செல்வாக்குடன் திகழ்ந்த சரஸ்வதி, காலப்போக்கில், வசதியிழந்தார். சில காலத்திற்கு முன்பு அவர் வறுமைக்குத் தள்ளப்பட்டார்.சாப்பிடக் கூட வழியின்றி திருச்சியில் உள்ள ஒரு கோவிலில் புகலிடம் அடைந்தார். அங்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் உணவைஉட்கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தஞ்சை சரஸ்வதியின் பெயரில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வங்கிக்கணக்கை தொடங்கி அதில்ரூ. 10 லட்சம் பணத்தை முதலீடு செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கணக்கிலிருந்து மாதம் வரும் வட்டித் தொகையான ரூ. 6,078 தொகையை தஞ்சை சரஸ்வதிக்கு வழங்குமாறும் முதல்வர்உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications