மதங்களைக் கடந்த மகாமகம்!

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

மகாமகம் விழாவுக்காக கும்பகோணம் வரும் பக்தர்களுக்கு கும்பகோணம் நகர இஸ்லாமிய நலக் கழகம் பல்வேறுஉதவிகளை வழங்கி வருகிறது.

அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் அவர்களை அப்படியேப் பின்பற்றும் அறிவில்லாத தொண்டர்களும்மதங்களின் பெயரால் மோதிக் கொள்வதும், முட்டிக் கொள்வதும், வெட்டிக் கொள்வதும் இந்தியாவில் சகஜமானஒன்றாகி விட்டது. ஆனால் அதையும் மீறி ஆங்காங்கே மதங்களைக் கடந்த மனித நேயம் தென்படுவதும்இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் கும்பகோணத்தில் தற்போது நடந்து வரும் மகாமகம் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காகஇஸ்லாமிய அமைப்பு ஒன்று பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.

கும்பகோணம் இஸ்லாமிய நலக் கழகம் என்ற பெயரிலான அந்த அமைப்பு பக்தர்களின் குடிநீர் வசதிக்காக நகர்முழுவதும் 15 சின்டெக்ஸ் தொட்டிகளை அமைத்துள்ளது. அத்தோடு, 500 மூட்டை அரிசியையும் கொடுத்துள்ளது.இதுதவிர பல்வேறு வகையான உதவிகளையும் இந்த அமைப்பு செய்து வருகிறது.

இந்த அமைப்பின் குழு உறுப்பினர்களில் ஒருவரான அப்துல் கபூர் இது குறித்துக் கூறுகையில், மனித நேயம்மட்டுமே எங்களது முக்கியக் குறிக்கோள். எந்த மதம், ஜாதி என்பது எங்களுக்குக் கவலையில்லை. மகாமகம்விழாவுக்காக மட்டும் நாங்கள் சமூக சேவை ஆற்றவில்லை.

பல காலமாக ஏழை மாணவர்கள், வறுமையில் வாடுவோருக்கு எத்தனையோ உதவிகளை எங்களால் முடிந்தஅளவுக்கு செய்து வருகிறோம். மனித உணர்வுகளை, மனிதநேயத்தை மதிக்க வேண்டும் என்பது ஒன்றுதான்எங்களது ஒரே கொள்கை என்றார்.

தொழிலதிபர் அப்துல், நான்கு லாரி தண்ணீர் பாக்கெட்டுகளை பக்தர்கள் வசதிக்காக நகர் முழுவதிலும் இலவசமாகவிநியோகித்துள்ளார் என்பது மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது.

கும்பகோணம் மகாமகத்திற்கு வரும் பக்தர்களின் மத்தியில் ஸ்டார் ஆக ஜொலிக்கிறது இஸ்லாமிய நலக் கழகம்.

  • மகாமகம்: கும்பகோணத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
    Mail this to a friend  Post your feedback  Print this page 
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+