For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாமகம்: கும்பகோணத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

மகாமக நிகழ்ச்சியின் ஐந்தாவது நாளான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பகோணத்தில் குவிந்து புனிதநீராடினர்.

தினந்தோறும் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் மகாமகக் குளத்தில் நீராடி வருகின்றனர். இந்தமுறை முதல்வர்ஜெயலலிதா புனித நீராடலில் பங்கேற்க வரமாட்டார் என்பது நிச்சயமாகிவிட்டது.

12 ஆண்டுகளுக்கு முன் நடந்த மகாமகத்தில் முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலா சகிதம் பங்கேற்றார்.அவர்களைக் காண கூட்டம் கூடியதில் ஏற்பட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர். தேர்தல் வரும் நேரத்தில்இப்போது மகாமகத்துக்குப் போனால் பழைய நினைவுகளை நாமே தூண்டிவிட்டது மாதிரி இருக்கும் என்பதால்,கும்பகோணம் வருவதை அவர் தவிர்த்துவிட்டார்.

ஆனால், முக்கிய நிகழ்ச்சியான மகாமகப் பெருவிழா நடக்கும் மார்ச் 6ம் தேதியன்று மகாமகக் குளத்தில் இருந்துபுனித நீர் போயஸ் கார்டனுக்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது. குளத்தில் 2 அடி அளவுக்கே நீர் உள்ளது.இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறங்கும்போது அது அசுத்தமாகி கலங்கிவிடுகிறது.

இதைத் தொடர்ந்து தினமும் நீர் மாற்றப்படுவதோடு, அவ்வப்போது குளோரினும் கலக்கப்படுகிறது.

மகாமகத்தையொட்டி கும்பகோணத்தின் முக்கிய புண்ணிய ஸ்தலங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள்நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசன் செய்து வருகின்றனர்.

மகாமகத்தையொட்டி கும்பகோணம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 1,500போலீசார் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரகசிய காமொராக்களும் வைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம்கண்காணிக்கப்படுகிறது.

ரயில், பஸ் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடெக்டர்களால் சோதனை செய்யப்படுகின்றன.மகாமகத்துக்காக கும்பகோணத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான சிறப்புப்பேருந்துகள் இரவு, பகலாக இயக்கப்படுகின்றன.

இவற்றை இயக்க கும்பகோணத்தில் 6 இடங்களில் தாற்காலிக பஸ் ஸ்டாண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

காஞ்சி மடமா? மதுரை ஆதீனமா?:

இதற்கிடையே மகாமகக் குளத்தில் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு முன்பாகவே மதுரை ஆதீனம் இறங்கி புனிதநீராடியது தொடர்பாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

கடந்த 25ம் தேதியன்று மகாமகக் குளத்தில் காலை 7 மணிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் நீராடி நிகழ்ச்சியைத்துவக்குவதாக இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்களை போலீசார் குளத்தில் இறங்க விடாமல்தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர்.

ஆனால், அதிகாலையில் காரில் அங்கு வந்திறங்கிய மதுரை ஆதீனம் விறுவிறுவென குளத்தில் இறங்கி நீராடஆரம்பித்தார். அவரைத் தடுக்க முடியாமல் போலீசார் கையைப் பிசைந்தனர். ஆதீனம் இறங்கியதால் பொதுமக்களில் பலரும் உள்ளே இறங்கி 2 அடி நீரை கலக்கிவிட்டுவிட்டனர்.

இந்தத் தகவல் சங்கராச்சாரியாருக்குத் தெரிவிக்கப்பட, 7 மணிக்கு வர இருந்தவர் அதை 9 மணிக்கு ஒத்திவைத்துவிட்டார். 9 மணிக்கு சங்கராச்சாரியார் வந்தபோதும் நீர் கலங்கிப் போயிருந்தது.

மதுரை ஆதீனத்தின் செயலால் தான் மக்களும் குதித்து குளம் கலங்கிப் போனது என்று கூற, ஆதீனத்துடன்வந்தவர்கள் பதிலுக்கு காஞ்சி மடத்தைவிட எங்கள் மடம் எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. இதனால் எங்கள்மடாதிபதி முதலில் நீராடியதில் எந்தத் தவறுமில்லை என்று பதில் தர அங்கே லேசான டென்சன் நிலவியது.

பின்னர் ஒரு வழியாக இரு தரப்பினரும் அமைதியாகித் திரும்பினர்.

  • மதங்களைக் கடந்த மகாமகம்!
    Mail this to a friend  Post your feedback  Print this page 
  •  
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X