Kanni: கன்னி ராசிக்கு தடைகள் தவிடு பொடியாகும்.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி
Vaikasi Matha Palangal: வைகாசி மாதத்தில் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா, என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் கன்னி வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.

சுக்கிரன் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடகத்தில் வந்து அமருகிறார். கேது சிம்ம வீட்டிலும், ராகு கும்ப வீட்டிலும் இருக்கிறார். இந்த கிரக நிலைகள் கன்னி ராசியினருக்கு என்ன விதமான பலன்களைக் கொடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றங்கள் ஏற்படும். உத்தியோகம் ரீதியாக அனுகூலம், ஏற்றம் காணப்படும். நம்பிக்கை ஏற்படும். உத்தியோகத்தில் அற்புதமான அமைப்பு ஏற்படும். சிறு சிறு சஞ்சலங்கள் காணப்பட்டாலும் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் நீங்கும்.
தடைகள் நீங்கும்
மரண பயம் நீங்கும். தடைகளை தவிடு பொடியாக்கி முன்னேற்றம் பெறும் காலகட்டம். செவ்வாய் கெட்டிருந்தாலும் ராஜயகோகத்தைக் கொடுக்கக்கூடிய காலகட்டம். நிலம், வீடு, மண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். திடீரென நல்ல முன்னேற்றங்களையும் நல்ல ஸ்தானத்துக்கு வரக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
மாற்றம், முன்னேற்றம்
இந்த வைகாசி மாதம் பல நல்ல மாற்றங்களை தரக்கூடியதாக இருக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் சிலருக்கு அமையலாம். நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த பயணங்கள் இப்போது நிறைவேறும் சூழ்நிலை உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான முன்னேற்றம் காணப்படும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
ஆரோக்கியம்
புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகி பொருளாதார நிலை மேம்படும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கோவில் தரிசனம், புனித யாத்திரை போன்றவற்றில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்துடன் ஆன்மீக பயணங்கள் செல்லவும் வாய்ப்பு உள்ளது. இந்த மாதத்தில் உடல்நலத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக உங்களின் மற்றும் தந்தையின் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாமல் இருப்பது அவசியம்.
வழிபாடு
சரியான உணவு மற்றும் ஓய்வை கடைபிடிப்பது நல்ல பலனை தரும். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் விஷயத்தில் கவனம் தேவை. பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications