மகாமகம்: சனிக்கிழமை தீர்த்தவாரி
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணம் மகாமக விழாவில் வரும் சனிக்கிழமை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 26ம் தேதி தொடங்கிய மகாமக விழாவில் இதுவரை 12 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். வரும் சனிக்கிழமை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அன்று ராஜகோபால் சுவாமிகள் கோயிலில் மட்டும் வீதி உலா நடக்கிறது. 12 சைவ திருக்கோயில் சுவாமிகளுக்கு மகாமகக் குளத்திலும், 5 வைணவ திருக்கோயில் சுவாமிகளுக்கு காவேரியிலும் தீர்த்தவாரி நடைபெறும்.
தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக கும்பகோணத்தில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தீர்த்தவாரியை முன்னிட்டு சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications