ஸ்ரீரங்கம் தீ விபத்து: திருமண மண்டபங்களில் தீயணைப்பு துறை ஆய்வு
சென்னை:
ஸ்ரீரங்கம் தீ விபத்தையடுத்து, திருமண மண்டபங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத் துறையினர் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் ஸ்ரீரங்கம் பத்மப்பிரியா திருமண மண்டபத்தில் நடந்த கோர தீ விபத்தில் 64 பேர் உயிழந்தனர்.இதனையடுத்து திருமண மண்டபங்களில் தீ விபத்து நேராத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டியமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு டிவிஷனில் உள்ள அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். டிவிஷனில் எத்தனை திருமணமண்டபங்கள் உள்ளன, முறையாக அனுமதி பெற்று அவை கட்டுப்பட்டுள்ளனவா, மண்டபம் எத்தனை தளங்களில்இயங்குகிறது, அவசர காலத்தில் வெளியேற போதுமான வழிகள் உள்ளனவா என்பன குறித்து ஆய்வுநடத்தப்படுகிறது.
தீ விபத்தை தவிர்க்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றுமண்டபத்தில் அனைவரின் பார்வைக்கும் தெரியும் வகையில் எழுதி வைக்க வேண்டும் என்றும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications