நோபல் பரிசுக்கு புஷ், போப் பெயர்கள் பரிந்துரை
ஆஸ்லோ:
உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், போப்பாண்டவர் ஜான் பால் ஆகியோரதுபெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பரிந்துரைக்கப்பட்டவர்களில் தகுதியானவர்களை 5 நபர்களைக் கொண்ட நோபல் கமிட்டி பரிசீலித்துஅறிவிக்கும்.
இந்த ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை நோபல்கமிட்டியின் செயலாளர் கெய்ர் லண்ட்ஸ்டட் வெளியிட்டுள்ளார். 50 நிறுவனங்களும், 144 தனி மனிதர்களுமாகமொத்தம் 194 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஜார்ஜ் புஷ், போப்பாண்டவர், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், பிரான்ஸ்அதிபர் ஜேக் சிராக் மற்றும் ஐ,நா. ஆயுத கண்காணிப்புக் குழு அதிகாரிகளான ஹான்ஸ் பிளிக்ஸ் மற்றும் முகம்மத்அல்-பராடய் ஆகியோர் முக்கியமானவர்கள். யாருக்கு நோபில் பரிசு கிடைக்கும் என்பது அக்டோபர் மாதமத்தியில் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications