சென்னை போக்குவரத்தை கண்காணிக்கும் கேமராக்கள்: தவறாக வாகனம் ஓட்டினால் கூரியர் மூலம் நோட்டீஸ் வரும்!
சென்னை:
சென்னை நகரின் போக்குவரத்தைக் கண்காணிக்க முக்கிய இடங்களில் கேரமாக்கள் பொறுத்தப்பட்டு வருகின்றன.
தாறுமாறாக வாகனங்களை ஓட்டுபவர்களை இந்த கேமராக்கள் உதவியுடன், கட்டுப்பாட்டு அறையில் இருக்கும்காவலர்கள், டிவி ஸ்கிரீன்களில் பார்த்து உடனடியாக அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ்அனுப்புவர்.
நோட்டீஸ்கள் 24 மணி நேரத்தில் போய்ச் சேருவதற்கு வசதியாக கூரியர் நிறுவனம் ஒன்றுடன் சென்னை நகரபோக்குவரத்துத்துறை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இப்போதைக்கு சென்னை சென்ட்ரல், கடற்கரைச் சாலை ஆகிய 2 இடங்களில் கேமராக்கள் பொறுத்தப்பட்டுஇயங்கவும் ஆரம்பித்துவிட்டன.
இது தவிர அண்ணா சாலை-எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, ஸ்பென்சர் சர்க்கிள், அண்ணா மேம்பாலம். கோயம்பேடுசந்திப்பு, நந்தனம் சர்க்கிள், ஈகா தியேட்டர்-மேம்பால சந்திப்பு ஆகிய 6 இடங்களிலும் கேமராக்கள்பொறுத்தப்படவுள்ளன.
நான்கு திசைகளிலும் நான்கு கேமராக்கள் பொறுத்தப்படுகின்றன. இது தவிர 360 டிகிரியும் சுழன்று படம்பிடிக்கும் பிஷ் ஐ லென்ஸ் கொண்ட கேமராவும் பொறுத்தப்படும். கட்டுப்பாட்டு அறையில் உள்ள காவலர்கள்,தவறாக ஓட்டப்படும் வாகனத்தின் எண்ணை போகஸ் செய்து படம் பிடிப்பர். பின்னர் ஓட்டும் நபரும் படம்பிடிக்கப்படுவார்.
இதைத் தொடர்ந்து விதிமீறியதற்கான நோட்டீஸ் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து அந்தந்தபோக்குவரத்துக் காவல் நிலையத்தில் வாகன ஓட்டிகள் ஆஜராகி பைன் கட்ட வேண்டும். காவல் நிலையத்தில்ஆஜராகாவிட்டால் போலீசாரே வீடு தேடி வந்து வாகனத்தை கைப்பற்றி, ஓட்டிய நபரையும் இழுத்துச் செல்வர்.
இந்த கேமராக்கள் இரவிலும் கூட செயல்படும் வகையில் நவீன தொழில்நுட்பம் கொண்டவை. மிகக் குறைவானவெளிச்சத்தில் கூட, இருக்கும் ஒளியை பல மடங்கு பூஸ்ட் செய்து படம் பிடிக்கும் திறன் கொண்டது.
இந்த கேமராக்கள் அனைத்தும் எழும்பூர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் ஹை-பேண்ட் விட்த் கொண்டதொலைத் தொடர்பு கேபிள்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
இத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து நகரின் பிற பகுதிகளுக்கும் இந்தக் கண்காணிப்புத் திட்டம்விரிவுபடுத்தப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications