அண்ணாச்சிக்கு எதிராக ஜீவஜோதியின் தாயார் சாட்சியம்
சென்னை:
ஜீவஜோதியையும், அவரது கணவர் பிரின்ஸ் சாந்தக்குமாரையும் சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால்கடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜீவஜோதியின் தாயார் தவமணி இன்று சாட்சியம் அளித்தார்.
பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் அவர் கூறியதாவது:
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தக்குமார் டிராவல்ஸ் கம்பெனி தொடங்க பல உதவிகளைச் செய்தார்ராஜகோபால். இவரின் உதவிகளை ஜீவஜோதி ஆரம்பத்தலிருந்தே என்னிடம் மறுத்து வந்தாள். இந் நிலையில்அவர் ஜீவஜோதியிடம் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். இது குறித்து ஒருநாள்என்னிடம் ஜீவஜோதி புகார் கூறினாள்.
அன்றைய இரவு 12 மணிக்கு ராஜகோபால் என் வீட்டுக்கு வந்து என்னையும், என் கணவரையும் அழைத்துக்கொண்டு ஜீவஜோதியின் வீட்டுக்கு சென்றார். அங்கு பிரின்ஸ் சாந்தக்குமாரிடம், நான் ஜீவஜோதியைத் திருமணம்செய்து கொள்ள வேண்டும். நீ எங்கேயாவது ஓடிவிடு என்று மிரட்டினார்.
அதற்கு மறுநாள் ஜீவஜோதியும், சாந்தக்குமாரும் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டனர். அன்று பிற்பகல் 3 மணக்குராஜகோபாலின் ஆட்கள் வீட்டுக்கு வந்து இருவரையும் பிடித்து தரதரவென்று இழுத்து, எங்கள் வீட்டிலிருந்தஅனைவரையும் அசோக் நகரில் உள்ள சந்திரசேகர் என்பவரது குடோனுக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு வந்த ராஜகோபால் தனது ஆட்களுடன் சேர்ந்து கொண்டு சாந்தக்குமாரை சராமாரியாக அடித்தார்.ஜீவஜோதியை விட்டுச் செல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். பின்னர் என்னையும், என் மகள்,கணவரையும் மட்டும் வீட்டில் கொண்டு வந்து விட்டனர். சாந்தகுமாரை விடவில்லை என்றார்.
இதே வழக்கில் ஜீவஜோதி நேற்று சாட்சியமளித்தது குறிப்பிடத்தக்கது.
-
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications