மகாமகம்: சென்னையிலிருந்து நாளை சிறப்பு ரயில், 250 பேருந்துகள்
கும்பகோணம்:
கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தீர்த்தவாரி நிகழ்ச்சிநடைபெறுவதையொட்டி நாளை மேலும் ஒரு சிறப்பு ரயிலும் மற்றும் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
தென்னக ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை எழும்பூரில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு அகல ரயில் பாதையில் சிறப்பு ரயில்ஒன்று இயக்கப்படுகிறது. இது விருத்தாச்சலம், செங்கல்பட்டு, மேல்மருத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருச்சி,தஞ்சை வழியாக இரவு 9 மணிக்கு கும்பகோணம் சென்றடையும்.
நாளை மறுநாள் பகல் 1.30 மணிக்கு கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு, இரவு 10.15க்கு சென்னை வந்து சேரும்.இதற்கான முன்பதிவு இன்று முதல் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
மாநில போக்குவரத்துக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 3ம் தேதியிலிருந்து சென்னை-கும்பகோணம்இடையே 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே 70 பேருந்துகளும், கோவை, நெல்லை, சேலம், நாகர்கோவில் ஆகியபகுதிகளிலிருந்து 60 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இவையனைத்தும் 8ம் தேதி வரை இயக்கப்படும்.தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் இன்று கூட்டம் மிக அதிகமாக இருந்தது. வி.ஹெச்.பி. தலைவர் அசோக்சிங்கால் இன்று புனித நீராடினார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications