10ம் தேதி முதல் வைகோ 56 நாள் சூறாவளி பிரசாரம்
சென்னை:
வருங்காலத்தில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்கும் தவறை மீண்டும் செய்ய மாட்டோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
வைகோ இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பிரதமர் வாஜ்பாய் சிறந்த தலைவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் இன்று அவர் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பிபோன்ற மதவாத சக்திகளின் பிடியில் சிக்கியுள்ளார். அவருக்கெ தெரியாமல் பொடா சட்டத்தில் கடுமையானபிரிவுகளை ஒரு தரப்பு பா.ஜ.கவினர் சேர்த்தார்கள்.
வாஜ்பாய் அரசு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கையிலிருந்து விலகி, பொது சிவில் சட்டம் கொண்டுவருவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதால்தான், கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறவேண்டியதாயிற்று. கூட்டணி தர்மத்துக்காகவே பொடா சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தோம். வருங்காலத்தில்பா.ஜ.கவுடன் கூட்டணி சேரும் தவறை மீண்டும் செய்ய மாட்டோம். மதசார்பின்மையை வலியுறுத்தியே என்பிரசாரம் இருக்கும்.
இந்தியா ஒளிர்கிறது என்ற மத்திய அரசின் விளம்பரத்தில் அடிப்படையே இல்லை. நாட்டில் ஏகப்பட்டகரும்புள்ளிகள் இருக்கும்போது இந்தியா எப்படி ஒளிரும்?
துணைப் பிரதமர் அத்வானி தொடங்கவிருக்கும் ரதயாத்திரை மதக்கலவரங்களுக்கே அடிகோலும். முன்பு அவர்நடத்திய ரதயாத்திரையால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை யாரும் இன்னும் மறக்கவில்லை.
காங்கிரசுடன் கூட்டணி சேர்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. திராவிடக் கட்சிகளுக்கு எதிரானகொள்கைகளையுடைய பா.ஜ.கவுடனே கூட்டணி வைத்தபோது எழாத பிரச்சனை இப்போது எழ வாய்ப்பில்லை.மேலும், இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் மற்ற கட்சிகளைப் போலவே காங்கிரஸ் கட்சியும்விரும்புகிறது.
இலங்கையின் அமைதி நிலவ தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக உலகமே ஒத்துக் கொண்ட விடுதலைப் புலிகளைஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. நாங்கள் இலங்கையில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைஆதரிக்கிறோமே தவிர, இந்தியாவில் அவர்களின் செயல்பாடுகளையோ, தீவிரவாதத்தையோ ஆதரிக்க வில்லை.
திமுகவின் சகோதரக் கட்சிதான் மதிமுக. மதிமுகவை திமுகவுடன் இணைக்க மாட்டோம். இந்தியக் கம்யூனிஸ்ட்டும்,மார்க்கசிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் இணைந்து செயலாற்றுவது போல் இணைந்து பணிபுரிவோம் என்றார் வைகோ.
திருச்சியிலிருந்து பிரசாரம்:
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் மே 10ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரத்தை வரும் 15ம் தேதிதொடங்கப் போவதாக திமுக தலைவர் கருணாநிதியும், தனது பிரச்சாரத்தை 9ம் தேதி தொடங்கப் போவதாகமுதல்வர் ஜெயலலிதாவும் அறிவித்துள்ளனர்.
இந் நிலையில், வைகோ தனது பிரச்சாரத்தை வரும் 10ம் தேதி திருச்சியில் தொடங்கவிருப்பதாக மதிமுகஅறிவித்துள்ளது. மே மாதம் 8ம் தேதி வரை தொடர்ந்து 56 நாட்களுக்கு 40 தொகுதிகளிலும் வைகோ பிரச்சாரம்செய்யவுள்ளார்.












Click it and Unblock the Notifications