ரூ. 100 கோடி சொத்து சேர்த்த பெண் சாராய வியாபாரி!
சென்னை:
கள்ளச் சாராயா வியாபாரம் மூலம் ரூ. 100 கோடி அளவுக்கு சொத்து சேர்த்த பெண் சாராயவியாபாரி ருக்மணி சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கோவை மாவட்டம் அவினாசி அருகே உள்ள நந்தியம்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர்ருக்மணி. இவரது கணவர் கர்நாடகத்திலிருந்து எரிசாராயத்தைக் கடத்தி வந்து தமிழ்நாடு மற்றும்கேரளாவில் கள்ளச் சாராயம் தயாரித்து விற்று வந்தார்.
கணவரின் மறைவையடுத்து ருக்மணியே அந்தத் தொழிலில் இறங்கினார். பெங்களூரில்தங்கியிருந்து தென் இந்தியா முழுவதும் சாராய சாம்ராஜ்யத்தையே நடத்தி வந்தார்.
கள்ளச்சாராய விற்பனை மூலம் பெங்களூரில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிவிட்டுள்ளார். ஏராளமான ஆம்னி பஸ்களும் ஓடுகின்றன. தமிழகத்தில் 2 நூற்பாலைகள் உள்பட22க்கும் மேற்பட்ட இடங்களில் இவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன.
இவரது சொத்துக்களின் மதிப்பு ரூ. 100 கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இவரை போலீசார் கைது செய்ய முயன்றபோதெல்லாம் நான் தான் ருக்மணி என்று கூறிக் கொண்டுபல பெண்கள் நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளனர். ஆனால், அவர்கள் ருக்மணி இல்லை என்றுதெரியவந்தது.
தனது புகைப்படம் கூட போலீசாரிடம் சிக்கிவிடாதபடி தலைமறைவாக, சர்வ ஜாக்கிரதையாகதொழில் நடத்தி வந்தார் ருக்மணி. சமீபத்தில் இவரது புகைப்படத்தையும் அடையாளத்தையும்போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து இவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. எப்படியும் பிடிபட்டுவிடுவோம்என்ற சூழல் உருவானதால் சமீபத்தில் இவர் அவினாசி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சாராய வழக்கு தொடர்பாக கோவை போலீஸார் இவரை இன்று சென்னை ஜார்ஜ்டவுன்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 22ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறுநீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து ருக்மணி மீண்டும் கோவை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கோர்ட் வளாகத்திற்கு ருக்மணி கொண்டு வரப்பட்டபோது அவரை படம் எடுக்க பத்திரிக்கைப்புகைப்படக்காரர்கள் முயன்றனர். அப்போது அவர்களை தாக்க முயன்றார் ருக்மணி. இதனால்அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications