ஜெ. கன்னடத்துக்காரரா?: வாசனுக்கு பாஜக கண்டனம்
சென்னை & கோவை:
முதல்வர் ஜெயலலிதாவை கன்னட மாநிலத்துக்காரர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் கூறியுள்ளது கண்டனத்துக்குரியது என்று தமிழக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் தமிழிசை கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியாதவது:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்றால், ஜெயலலிதா கன்னட மாநிலத்தவர் என்று வாசன் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. துணைப் பிரதமர் அத்வானியின் ரதயாத்திரை குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள், இது ரத யாத்திரை அல்ல ரத்த யாத்திரை என்று கூறியிருப்பதும் கடும் கண்டனத்துக்குரியது என்றார்.
பிரச்சனை ஏற்படாது: இல.கணேசன்
இந் நிலையில் கோவையில் அத்வானி பேசவிருக்கும் வ.உ.சி மைதானத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சியின் அகில இந்திய செயலாளர் இல.கணேசன்,
அத்வானியின் ரதயாத்திரையால் வகுப்புக் கலவரம் ஏற்படாது. அத்வானியின் பிரச்சாரத்தை நினைத்து எதிர்க் கட்சிகளின் வயிற்றுக்குள் தான் கலவரம் ஏற்பட்டுள்ளது. எல்லா தலைவர்களையும் போலத்தான் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளார். திட்டமிட்டபடி அவர் கோவை வருவார்.
கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் எப்போது வெளியாகும் என்பதை நாளை கட்சித் தலைவர் வெங்கைய்யா நாயுடு அறிவிப்பார். ஆலடி அருணாவைப் போல் திமுக கட்சியில் அதிருப்தியுடன் இருக்கும் பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியே வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications