அரசியல் நாகரீகம் இல்லாத ஜெயலலிதா: கருணாநிதி தாக்கு
சென்னை:
வெளிநாட்டவரான சோனியா காந்தி பிரதமர் பதவிக்கு வரக் கூடாது என்று கூறும் ஜெயலலிதா, வாஜ்பாய் அரசைக்கவிழ்த்தபோது சோனியா தலைமையில் ஆட்சி அமைக்க முயன்றது ஏன் என்று கருணாநிதி கேள்விஎழுப்பியுள்ளார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் சோனியா மீது முதல்வர் ஜெயலலிதா கடும் விமர்சனம் தொடுத்திருப்பதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
தேர்தல் அறிக்கை என்ற பெயரில் தனிப்பட்ட முறையில் சோனியாவை மிக மோசமாகத் தாக்கியுள்ளார்ஜெயலலிதா. இதன் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்குமா என்று தெரியவில்லை.
கட்சியின் திட்டங்கள், கொள்கைகள், உறுதிமொழிகள் தான் தேர்தல் அறிக்கையில் சொல்வார்கள். ஆனால்,அதைக் கூட நாகரீமில்லாமல் சோனியாவைத் தாக்க ஜெயலலிதா பயன்படுத்தியிருக்கிறார்.
1999ம் ஆண்டில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டு சோனியா தலைமையில் ஆட்சிஅமைப்போம் என்று சொன்னது இதே ஜெயலலிதா தான். மத்தியில் காங்கிரசல்லாத, பா.ஜ.க. அல்லாத அரசைஅமைப்போம் என்று சட்டமன்றத்தில் பேசியதும் இதே ஜெயலலிதா தான்.
இப்போது வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதன் மூலம்ஜெயலலிதாவுக்கு கொள்கையோ, உறுதியோ கிடையாது என்பது தெளிவாகிவிட்டது என்று கூறியுள்ளார்கருணாநிதி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் வரதராஜன் நிருபர்களிடம் பேசுகையில்,
பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததற்காக ஒருமுறை மக்களிடம் வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டவர்ஜெயலலிதா. இப்போது அதே கட்சியுடன் கூட்டணி சேர்ந்து, தான் ஒரு சந்தர்ப்பவாதி என்பதை நிரூபித்துவிட்டார்.
ஒருமுறை சோனியாவை பிரதமராக ஆதரித்தவர் இப்போது அவரை வெளிநாட்டுக்காரர்என்கிறார்.ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாதத்துக்கு அளவில்லாமல் போய்விட்டது.
ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்த அத்வானி முயல்கிறார். மதவாதத்தைத் தூண்டிவிட்டு ஓட்டுவாங்கவே இந்த யாத்திரை நடக்கிறது என்றார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications