புலிகள் இடையே ஆயுத மோதல் வராது என்கிறார் கருணா
கொழும்பு:
புலிகள் இயக்கத்துக்குள் ஆயுத மோதல் எதுவும் ஏற்படாது என அந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட கருணாகூறியுள்ளார். அதே நேரத்தில் தனது தற்காப்பை உறுதி செய்து கொள்வதில் தீவிரமாக இருப்பதாகவும்கூறியிருக்கிறார்.
அவரது செய்தித் தொடர்பாளரான வரதன் நிருபர்களிடம் பேசுகையில்,
அரசுக்கும் தனது தலைமையிலான படைக்கும் இடையே தனியான போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளநார்வே தூதர்களின் உதவியை கருணா நாடியுள்ளார். நார்வேயின் பதிலுக்காக காத்திருக்கிறோம். அவர்கள்விரும்பினால் நேரில் சந்தித்துப் பேசவும் தயாராக இருக்கிறோம்.
மட்டக்களப்பு பகுதியின் பிஷப் தலைமையிலான குழு எங்களைச் சந்தித்தது. அப்போது வட பகுதியின்தலைமையின் கீழ் (பிரபாகரன்) நாங்கள் செயல்பட விரும்பவில்லை என்ற எங்களது நிலையை அவர்களிடம்தெளிவுபடுத்திவிட்டோம்.
எங்கள் பிரிவுகளுக்கு இடையே ஆயுத மோதல் எதுவும் ஏற்படாது. அதே நேரத்தில் எங்கள் தற்காப்பை உறுதிசெய்து கொள்வோம் என்றார் வரதன்.
தங்களுடன் தனி அமைதி ஒப்பந்தம் செய்ய வேண்டும் என கருணா தரப்பின் கோரிக்கையை இலங்கை ராணுவம்நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நார்வே அமைதித் தூதர் எரிக் சோல்ஹைம் இன்று கொழும்பு வருகிறார். பிரபாகரனின்பிரதிநிதிகளை சந்திக்க உள்ள அவர் கருணாவை சந்திப்பாரா என்று தெரியவில்லை.
இந் நிலையில் மட்டக்களப்பு பகுதியின் பிஷப் இன்று வன்னி பகுதிக்குச் சென்று புலிகள் இயக்கப் பிரதிநிதிகளுடன்சமாதான பேச்சு நடத்தி வருகிறார்.
மட்டக்களப்பில் கடைகளும் பள்ளிகளும் இன்று பூட்டப்பட்டிருந்தன. போக்குவரத்தும் முழுவதுமாகநிறுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையே கருணாவுக்குப் பதவி விலக மறுத்து வருவதால், அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட புதியகமாண்டரான ரமேஷ் இன்னும் தனது பொறுப்பை நேரடியாக ஏற்கவில்லை.
முன்னதாக, தன்னைக் கொல்ல பிரபாகரன் இரு குழுக்களை அனுப்பியுள்ளதாக கருணா குற்றம் சாட்டியதாகசெய்திகள் வந்தன.
தன்னைக் கொலை செய்யவும், தனது அணியில் உள்ள போராளிகளைத் தாக்குவதற்கும் பிரபாகரன் இருகுழுக்களை ஏவியுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாகவும். அவ்வாறு தாக்குதல் நடந்தால், கோஷ்டிச்சண்டை ஏற்படும். பலர் கொலை செய்யப்படுவார்கள் என்றும் கருணா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்வசம் 6,000 போராளிகள் இருப்பதாகவும் கருணா கூறியுள்ளார்.
இந் நிலையில் இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், புலிகளில் ஏதாவது ஒரு தரப்பினர் எங்கள்மீதுதாக்குதல் நடத்தலாம். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவத்தை உஷார் நிலையில்வைத்துள்ளோம் என்றார்.
மட்டக்களப்பில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வட பகுதி மாணவர்கள், தங்கள் மீது தாக்குதல் நடக்கும்என்ற அச்சத்தில் விடுதியைக் காலி செய்து விட்டு, தத்தம் ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். இதனால் அந்தப்பல்கலைக் கழகம் தேர்வுகளை கால வரையின்றி ஒத்தி வைத்துள்ளது.
இந் நிலையில் தமிழகத்தின் வேதாரண்யம், ராமேஸ்வரம் கடல் பகுதிகளில் கண்காணிப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புலிகளுக்குள் மோதல் ஏதாவது ஏற்பட்டால் தமிழகத்தில் அவர்கள் நுழையலாம் எனமத்திய உளவுப் பிரிவான ஐ.பி. கூறியுள்ளதையடுத்து தமிழக போலீசாரின் கண்காணிப்புஅதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications