இது வயிற்றெரிச்சல் அறிக்கை: அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து ராமதாஸ்
சென்னை:
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வயிற்றெரிச்சலும் வசைபாடலுமே அதிகமாக உள்ளது. அதில் தமிழகமக்களின் நலன் குறித்து எந்த விஷயமும் இல்லை என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி விஷயத்தில் எதிர்க் கட்சிகளை அபாண்டமாக குற்றம் சாட்டியிருக்கிறது அதிமுகவின் தேர்தல் அறிக்கை.ஜெயலலிதாவின் ஆட்சியில் காவிரி டெல்டா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வறண்டு கிடக்கிறது. பயிர்கள்கருகிப் போய்விட்டன. இதற்கு ஜெயலலிதா தான் பொறுப்பு.
கர்நாடகத்திடம் இருந்து உரிய நீரைப் பெற்றிருக்க வேண்டியது ஜெயலலிதா அரசின் பொறுப்பு. ஆனால்,ஜெயலலிதாவின் ஆணவமும் சர்வாதிகாரத்தனமான நடவடிக்கைகளும் கர்நாடகத்திடம் இருந்து நீர் கிடைக்காமல்போகச் செய்துவிட்டன.
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி ஆணையத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று லெட்டர்எழுதிய ஜெயலலிதா தான் இன்று அவரோடு கூட்டு சேர்ந்திருக்கிறார். இதை மக்கள் மறக்க மாட்டார்கள்.
கடந்த முறை வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த ஜெயலலிதா, இன்று நிலையான ஆட்சிக்காக பா.ஜ.கவுடன் கூட்டுசேர்ந்துள்ளதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதைப் பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள்.
செலக்டிவ் ஆம்னிசியா என்று ஜெயலலிதாவால் விமர்சிக்கப்பட்ட அத்வானி வேண்டுமானால் இதைமறந்திருக்கலாம். ஆனால், வாஜ்பாய் மறந்திருக்க மாட்டார். இந்த சந்தர்ப்பவாத கூட்டணிக்கு தமிழக மக்கள் நல்லபாடம் புகட்டப் போவது நிச்சயம்.
இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications