ஜாதி துவேஷம் காட்டுகிறார் ஜெ.: ராமதாஸ் பாய்ச்சல்
கரூர்:
வன்னியர்கள் மீதான தனது ஜாதி துவேஷத்தைக் காட்டி பிற ஜாதியினரின் ஓட்டுக்களைப் பெற முதல்வர்ஜெயலலிதா முயலுவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மதுராந்தகத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது டாக்டர் ராமதாஸ் ஒரு ஜாதி வெறியர் என்று மிகக் கடுமையாகதாக்கிப் பேசியிருந்தார் ஜெயலலிதா. இதற்கு கரூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பதில் அளித்தார்ராமதாஸ்.
அவர் பேசுகையில், அரசியல் காரணங்களுக்காக ஜாதியை பயன்படுத்துகிறார் ஜெயலலிதா. வன்னியர்கள் மீதானதனது ஜாதி துவேஷத்தை வெளிப்படுத்தி, பிற ஜாதியினரின் ஓட்டுக்களைப் பெற முயலுகிறார்.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் நலனுக்காக பா.ம.க. (?)கடுமையாகப் பாடுபட்டுள்ளது. என்னை ஜாதி வெறியன் என்று கூறிய ஜெயலலிதாவுக்கு இந்த சமுதாயத்தினர்நல்ல பாடம் கற்பிப்பார்கள்.
சோனியாவை வெளிநாட்டுப் பெண் என்று இப்போது கூறும் ஜெயலலிதா, வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியைக்கவிழ்த்து விட்டு அதே வேகத்தில், சோனியா காந்தியைப் பிரதமராக்க ஆதரவு தருவதாக குடியரசுத் தலைவருக்குகடிதம் எழுதியது ஏன்? அப்போது சோனியா வெளிநாட்டுப் பெண் என்று அவருக்குத் தெரியாதா?
ஜெயலலிதாவுக்கு எதிராக அதிருப்தி அலை தமிழகத்தில் வீசுகிறது. எனவே ஜனநாயக முற்போக்குக் கூட்டணிபாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும் என்றார் அவர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications