போலீஸ் கண்காணிப்பில் முத்திரை தாள் வியாபாரிகள்
சென்னை:
சென்னை நகரில் உள்ள முத்திரைத் தாள் விற்பனையாளர்களை சிபிசிஐடி போலீஸார் தீவிரமாகக் கண்காணித்துவருகிறார்கள்.
இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போலி முத்திரைத் தாள் விவகாரம் தமிழகத்திலும் தற்போதுவிஸ்வரூபமெடுத்து வருகிறது. போலி முத்திரைத்தாள் விவகார நாயகனான அப்துல் கரீம் டெல்ஜியின் கூட்டாளிநிஜாமுதீனுக்கும், தமிழக காவல்துறை அதிகாரிகள் முகம்மது அலி, அமித் வர்மா ஆகியோருக்கும் இடையேதொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. தற்போது இது தொடர்பான வழக்குகளை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கஉள்ளனர்.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாம்பரம் சார்-பதிவாளர் அலுவலக வளாகத்தில் போலி முத்திரைத்தாள்களை விற்றதாக கோவிந்தராஜன், ராமச்சந்திரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்துசென்னை நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது முத்திரைத் தாள் விவகாரத்தில் மேலும் சிலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. அண்ணா நகர்,சைதாப்பேட்டை பகுதியில் உள்ள சில முத்திரைத் தாள் விற்பனையாளர்கள் நிஜாமுதீனின் நெருங்கிய கூட்டாளிகள்என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சென்னையில் உள்ள முத்திரைத் தாள் விற்பனையாளர்களை தீவிரமாகக் கண்காணிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளனர்.
விரைவில் போலி முத்திரைத் தாள் தொடர்பான விசாரணையில் சிபிஐ இறங்கவுள்ளது. அப்போது பல்வேறுஉண்மைகள் வெளியாகும் என்று தெரிகிறது.
-
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications