ஜெயலலிதாவுக்கு நாகரீகம் தெரியாது: அய்யர்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர அய்யர் இன்று சந்தித்துப் பேசினார்.
மயிலாடுதுறையில் மணிசங்கர அய்யர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளார். அவரை ஆள் வைத்துத் தாக்கிய ஓ.எஸ்.மணியன் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.
இன்று காலை அய்யர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சென்று சந்தித்தார். அப்போது மணியத்தின் ஆள்பலத்தை சமாளிப்பது குறித்து பேசியதாகத் தெரிகிறது. அப்போது அய்யருக்கு திமுக தொண்டர்களின் முழு உதவியும் தரப்படும்என கருணாநிதி உறுதியளித்தார்.
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அய்யர், மரியாதை நிமித்தம் கருணாநிதியை சந்தித்தேன். அவரது வாழ்த்தைப்பெற்றேன். இனி புத்துணர்வோடும், புதுத் தெம்போடும் பிரசாரத்தைத் தொடங்கப் போகிறேன். கூட்டணியில் உள்ள பிறகட்சிகளின் தலைவர்களையும் சந்திப்பேன்.
சோனியா காந்தி குறித்து முதல்வர் ஜெயலலிதா மிக அநாகரீகமாக பேசி வருகிறார். சோனியா பற்றி பேசக் கூட ஜெயலலிதாவுக்குதகுதி கிடையாது. மேடை நாகரீகம் கூடத் தெரியாதவர் ஜெயலலிதா. தோல்வி பயத்தால் மன உளைச்சலில் இருக்கும் ஜெயலலிதாஎன்ன வேண்டுமானாலும் பேசுவார் என்றார்.
முன்னதாக கருணாநிதியை வணிகர்கள் சங்கத்தினர் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications