மங்களூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் வே.கணேசன்
சென்னை:
மங்களூர் சட்டசபைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக வே.கணேசன் போட்டியிடுகிறார்.
மங்களூர் தனித் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர் திருமாவளவன். திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்துமங்களூருக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் ராமலிங்கம் போட்டியிடுகிறார்.
இந் நிலையில் திமுக வேட்பாளரை முடிவு செய்ய இன்று அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடந்தது. 23 பேர்போட்டியிட மனு செய்து நேர்காணலில் கலந்து கொண்டனர். அவர்களிடம் கட்சியின் தலைவர் கருணாநிதி,பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின்ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
இறுதியில் வே.கணேசன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக திமுக கடலூர் மாவட்டச் செயலாளர், நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மங்களூர்தொகுதி ஒன்றிய செயலாளர்கள் ஆகியோரின் கூட்டத்தையும் நடத்திய கருணாநிதி வேட்பாளராக யாரைத் தேர்வுசெய்யலாம் என்று ஆலோசித்தார்.
சட்டமன்றத்தில் மதிமுகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததால் தங்களுக்கு இந்தத் தொகுதியை ஒதுக்க வேண்டும் எனஅக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துப் பார்த்தார். ஆனால், அதை திமுகவும் பா.ம.க.தலைவர் ராமதாசும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications