சோனியா, ராமதாஸ், வைகோ மீது ஜெ. மீண்டும் பாய்ச்சல்
ஓசூர்:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர்மீது முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடும் தாக்குதல் தொடுத்தார்.
தர்மபுரி தொகுதிக்குட்பட்ட சிங்காரப்பேட்டை, பெரியதாடனூர் ஆகிய கிராமங்களில் அவர் பிரச்சாரம்மேற்கொண்டார் அப்போது சோனியாவை பிடி பிடித்தார். ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர்களை ஆதரிக்கும்திமுக, மதிமுக, பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் சோனியா கூட்டணி வைத்துள்ளார்.
சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ள சோனியா காந்தி இந்தியாவின் பிரதமராகும் தகுதி இல்லாதவர். ஒருவெளிநாட்டுக்காரரை பிரதமராக ஏற்கும் அளவுக்கு இந்தியர்கள் முட்டாள்கள் அல்லர்.
அதிகாரத்தை மட்டுமே அனுபவிக்கும் மனப்பான்மை கொண்ட கட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான்ஜனநாயக முற்போக்குக் கூட்டணி (திமுக தலைமையிலான கூட்டணி). இந்தக் கட்சிகளிடம் ஆட்சியைக்கொடுத்தால், நாட்டை அழிவுப்பாதைக்குக் கொண்டு சென்று விடுவார்கள்.
இந்தியா ஒற்றுமையோடும், ஒருமைப்பாட்டோடும், இறையாண்மையோடும் இருந்திட பிரிவினைவாத, தீவிரவாதசக்திகளைப் புறக்கணியுங்கள். உலக அரங்கில் இந்தியாவை வல்லராசக மாற்றுவோம். நாளைய பாரதம் வல்லரசு,நாட்டுக்குத் தேவை நல்லரசு என்றார் ஜெயலலிதா.
காவேரிப்பட்டினம் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசும்போது,
திமுக கூட்டணியில் இருக்கும் ராமதாசுக்கு எதிலும் ஒரு நிலைப்பாடு இல்லை. காலையில் ஒரு பேச்சு, மாலையில்ஒரு பேச்சு, தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு, தேர்தலுக்குப் பின் ஒரு பேச்சு. இவர் பேசுவதில் எது சரி என்று புரிந்துகொள்ள முடியாமல் மக்கள் திணறுகிறார்கள். ஒரு சாதியினரின் நன்மைக்காக மட்டுமே கட்சி நடத்தும் ராமதாஸாதமிழ் இனத்தைப் பற்றியும், தமிழர் ஒற்றுமை பற்றியும் பேசுவது?
வசனம் பேசுவதையே தன் வாழ்க்கையாக எண்ணிக் கொண்டிருப்பவர் வைகோ. இந்த வாய்ச்சவடால் மன்னரால்,அவரது கட்சியால் தமிழகத்துக்கு ஏதேனும் நன்மை கிடைத்ததுண்டா என்று பேசினார் ஜெயலலிதா.
ஜெயலலிதா தனது பிரச்சாரத்தின்போது கூடியிருப்பவர்களிடம் அடுத்த பிரதமர் யார் என்று அடிக்கடி கேட்டுவருகிறார். அவர் அப்படிக் கேட்கும்போதெல்லாம், நீங்கள்தான் அம்மா என்றுதான் அதிமுகவினர் கூறுகிறார்கள்.யாரும் தவறிப் போய்க் கூட வாஜ்பாய் என்று கூறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications