மாமியார் கொடுமை: 3 குழந்தைகளுடன் தாய் தீ வைத்து தற்கொலை
சென்னை:
மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம் பெண் தனது மூன்று குழந்தைகளுடன் உடலில் தீ வைத்துதற்கொலை செய்து கொண்டார். சென்னை ஆவடி அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது.
ஆவடி முத்தாபுதுப்பேட்யைைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சீனிவாசன். இவரது மனைவி மாலதி (வயது 28).இவர்களுக்கு கமலி (6), வருசம்மா (5), கிஷோர் (3) ஆகிய மூன்று குழந்தைகள். இவர்களது வீட்டுக்கு அருகில்சீனிவாசனின் தாயார் கிருஷ்ணவேணி வசித்து வருகிறார்.
மாமியார் கிருஷ்ணவேணிக்கும் மாலதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. மாலதியை கிருஷ்ணவேணிகொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இந் நிலையில் நேற்றிரவும் மருமகள் மாலதியுடன் சண்டைக்குப் போனார் கிருஷ்ணவேணி. வாய்க்கு வந்தபடிஅவர் திட்டியதால் அழுதபடியே தன் குழந்தைகளை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் போன மாலதி, அவர்கள் மீதுமணணெண்ணையை ஊற்றி தீ வைத்தார்.
பின்னர் தன் மீதும் தீ வைத்துக் கொண்டார். இதில் குழந்தைகள் அலறித் துடித்தன. வீட்டை உள்பக்கமாக மாலதிபூட்டிக் கொண்டதால் யாராலும் உள்ளே நுழைய முடியவில்லை. சிறிது நேரத்தில் வீடே தீப்பிடித்துக் கொண்டது.
பொது மக்கள் திரண்டு வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது மாலதியும், குழந்தைகள் கமலியும்கிஷோரும் உடல் முழுவதும் கரிக்கட்டையாக எரிந்து, இறந்து கிடந்தனர். வருசம்மாவின் உடலில் உயிர் இருந்தது.
அந்தக் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு பொது மக்கள் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றிஅவளும் இறந்தாள்.
இந்தச் சம்பவம் அப் பகுதியை பெரும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications