ஜெகத்ரட்சகனுக்கு சீட் கொடுப்பதை தடுத்த பா.ம.க.: ஆர்.எம்.வீரப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகனுக்கு சீட் கொடுப்பதை பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் தடுத்துவிட்டதாக எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கடந்த பல வருடங்களாக எம்.ஜி.ஆர். கழகம் என்ற கட்சியைநடத்தி வருகிறார். திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் கூட இதுவரை ஒரு தேர்தலில் கூட இந்தக் கட்சிக்குதிமுக சீட் கொடுத்ததில்லை. அப்படியே கொடுத்தாலும் கூட திமுக சின்னத்தில் நிற்க வைத்தே சீட் கொடுப்பார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஜெகத்ரட்சகனுக்காக ஆர்.எம்.வீரப்பன் கருணாநிதியிடம் சீட் கேட்டார். ஆனால்கருணாநிதி மறுத்து விட்டார். மேலும், ஜெகத்ரட்சகன் கடந்த முறை போட்டியிட்டு வென்ற (திமுக சின்னத்தில்தான்)அரக்கோணம் தொகுதியை பா.ம.கவுக்குக் கொடுத்து விட்டது திமுக.

இதனால் அதிருப்தியடைந்த ஜெகத்ரட்சகன் அரக்கோணத்தில் தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்துவருகிறார். இந்தச் சூழ்நிலையில், சென்னையில் எம்.ஜி.ஆர். கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது.ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஆர்.எம்.வீரப்பன் பேசுகையில், அரக்கோணம் தொகுதி தொடர்பாகஜெகத்ரட்சகனும் நானும், கருணாநிதியைப் பார்க்கச் சென்றோம். அப்போது, திமுக போட்டியிடுவதாக இருந்தால்அரக்கோணத்தை விட்டுக் கொடுப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பதாக கருணாநிதி தெரிவித்தார்.

இதையடுத்து திமுகவில் சேர்ந்து அரக்கோணத்தில் போட்டியிடுமாறு ஜெகத்ரட்சகனை கேட்டுக் கொண்டேன்.ஆனால் அதை அவர் கண்களில் நீர் மல்க மறுத்து விட்டு, அப்படி ஒரு வாய்ப்பு எனக்குத் தேவையில்லை.உங்களோடு இப்படியே இருந்து விடுகிறேன் என்று கூறி விட்டார்.

ஜெகத்ரட்சகன் தொடர்ந்து எம்.ஜி.ஆர். கழகத்தின் பொதுச் செயலாளராகத்தான் இருக்கிறார். அவர் பா.ஜ.க. சார்பில்போட்டியிடுவதாக தகவல் வந்துள்ளது குறித்து எனக்குத் தெரியவில்லை. போட்டியிடுவதாக இருந்தால் என்னிடம்சொல்லாமல் செய்ய மாட்டார்.

யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எம்.ஜி.ஆர். கழகத்தை நான் தொடர்ந்து நடத்துவேன். மானத்தை இழந்துநான் இருக்க மாட்டேன். எனது சொத்துக்களை விற்றாவது கட்சியை நடத்துவேன் என்றார் வீரப்பன்.

பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த 1996ம் ஆண்டு முதல் இன்று வரைஎம்.ஜி.ஆர். கழகம் மட்டுமே திமுகவின் தோழமைக் கட்சியாக உள்ளது. தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தாலும்,கொடுக்கப்படாவிட்டாலும் என்றுமே திமுகவின் தோழமைக் கட்சியாக எம்.ஜி.ஆர். கழகம் நீடிக்கும்.

நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர். கழகத்திற்கு சீட் கிடைக்காவிட்டாலும் கூட ஜனநாயக முற்போக்குக்கூட்டணியில் நாங்களும் தொடர்ந்து நீடிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+