ஜீவஜோதியின் கணவரை நான் கொல்லவில்லை: சரவண பவன் ராஜகோபால்
சென்னை:
ஜீவஜோதியின் கணவரை நான் கொல்லவில்லை. புகழ் பெற்ற எனது நிறுவனத்திற்கும், எனக்கும் களங்கம்விளைவிக்க போடப்பட்டுள்ள பொய் வழக்கு இது என்று சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால்பூந்தமல்லி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த சாந்தக்குமார் என்பவரை ராஜகோபால் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டதாக அவரது மனைவி ஜீவஜோதி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் ராஜகோபால் உள்ளிட்ட 9 பேரைக்கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீதான வழக்கு பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ராஜகோபாலுக்கு எதிரான பலஅரசுத் தரப்பு சாட்சிகள் பல்டி அடித்துள்ள நிலையில் ராஜகோபால் உள்ளிட்ட 9 பேரிடம், உங்கள் மீதானகுற்றச்சாட்டு குறித்து ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று நீதிபதி செல்வக்குமார் கேட்டார்.
அப்போது ராஜகோபால், இது அப்பட்டமான பொய் வழக்கு. புகழ் பெற்ற எனது நிறுவனத்தையும், என்னையும்குறிவைத்து, எனது நிறுவனத்தில் வேலை பார்த்தவரும் (ஜீவஜோதியின் தந்தை) அவரது குடும்பத்தினரும் சேர்ந்துசெய்துள்ள சதியே இது.
நான் அப்பாவி. சாந்தக்குமாரை நான் கொலை செய்யவில்லை. அந்த அளவுக்கு இறங்குபவனும் அல்ல. இந்தவழக்கில் தேவையில்லாமல் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.
குற்றம் சாட்டப்பட்ட மற்ற 8 பேரான டேணியல், காசி, ஹூசேன், கார்மேகம், தமிழ் செல்வன், பட்டுராஜன், சேது,முருகானந்தம் ஆகியோரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கில் ராஜகோபால் தரப்பு சாட்சியாக தடயவியல் நிபுணர் சந்திரசேகர் வருகிற 22ம் தேதி சாட்சியம்அளிக்கவுள்ளார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications