இந்திய அணியின் வெற்றியால் அளவுக்கதிக மகிழ்ச்சி: முதியவர் திடீர் சாவு
தரங்கம்பாடி:
பாகிஸ்தானுடான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான கடைசி நிமிடங்களைப் பார்த்துக்கொண்டிருந்த முதியவர், இந்திய அணி பெற்ற வெற்றியால், அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சியடைந்துஉணர்ச்சிவசப்பட்டதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சிதம்பரத்தையடுத்துள்ள தரங்கம்பாடியில் இச் சம்பவம் நடந்தது. நேற்று இந்த கிரிக்கெட் போட்டி நடந்தது.
இதை கோவிந்தசாமி என்ற 85 வயது முதியவர் ஆர்வத்துடன் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார். இந்திய அணிவெல்ல வேண்டும் என்று காலையில் இருந்து பரபரப்பாக இருந்தவர், அடிக்கடி இதற்காக பூஜைகளையும் செய்தார்.சரியாக உணவும் உட்கொள்ளாமல் டிவி முன் உட்கார்ந்திருந்தார்.
4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியபோது மிகவும் நொந்து போய் மனம் வருந்தினார். தோற்கும்நிலையில் இருந்த அணியை முகம்மத் கைப் மற்றும் ராகுல் திராவிட் ஆகியோர் சேர்ந்து கரையேற்றிக்கொண்டிருந்தனர்.
இதனால் பரபரப்பானார் கோவிந்தசாமி. அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியில் குதித்தார். உற்சாகத்தில் சத்தமிட்டார்.உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
மேட்ச் பார்த்துக் கொண்டே இருந்தவர் திடீரென சரிந்து விழுந்தார். வீட்டினர் அவரை சோதித்தபோது அவர்இறந்து போயிருந்தார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications