திருடர்களின் புகலிடமாக மாறி வருகிறது பா.ஜ.க: திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

தமிழகம் எழுகிறது என்ற பிரச்சார முழக்கத்துடன் மக்கள் கூட்டணி தனது தேர்தல் வேலைகளைத்தொடங்கியுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சேலம் நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இந்துத்வா கொள்கை எதிர்ப்பு மாநாடு நடந்தது. போஸ்மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள்,மக்கள் தமிழ் தேசம், இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகள் இணைந்துள்ள மக்கள் கூட்டணியில், விடுதலைச்சிறுத்தைகள்8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

சிதம்பரம், மயிலாடுதுறை, பாண்டிச்சேரி, ஸ்ரீபெரும்புதூர், தர்மபுரி, ராசிபுரம், பெரம்பலூர் மற்றும் மதுரை ஆகியதொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம்.

எங்களது கூட்டணியின் பிரச்சார முழக்கமாக தமிழகம் எழுகிறது என்ற வாசகம் இருக்கும். இந்தியாவில் உள்ளபல்லாயிரக்கணக்கான குடிசை வீடுகளில் விளக்கொளி கூட இல்லாமல் வறுமை தாண்டவமாடுகிறது. ஆனால்இந்தியா ஒளிர்வதாக பா.ஜ.க. பொய்களைக் கூறி வருகிறது.

நடிகர், நடிகைகள் மற்றும் திருடர்களின் புகலிடமாக பா.ஜ.க. மாறி வருகிறது. வேட்பாளர்களைக் கூட தேர்வுசெய்ய முடியாமல்,ஆட்கள் இல்லாத கட்சியாக மாறிவிட்டதால், போகிற வருகிறவர்களை எல்லாம் கட்சியில்சேர்த்துக் கொண்டு அவர்களையே வேட்பாளர்களாக அறிவிக்கும் நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டு விட்டது.

பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் பெருமளவு வன்முறைகளையும், கலவரத்தையும் ஏற்படுத்த பா.ம.கவினர்திட்டமிட்டுள்ளனர். எனவே அங்கு, குறிப்பாக சிதம்பரம் தொகுதியில் (இங்குதான் திருமாவளவன்போட்டியிடவுள்ளார்) புற ராணுவப் படைகளை குவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கைவைக்கவுள்ளோம்.

சோனியா, வாஜ்பாய் ஆகியோரில் ஒருவர்தான் பிரதமராக வர வேண்டுமா? வேறு யாரும் வரக் கூடாதா?எங்களது கூட்டணியிலும் பிரதமர் வேட்பாளர் ஒருவர் உள்ளார். அவர் யார் என்பதை தேர்தல் பிரச்சாரத்தின்போதுதெரிவிப்போம் என்றார் திருமாவளவன்.

தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றால், நாடார்கள், முத்தரையர்கள், தலித் கிறிஸ்தவர்கள் ஆகியோரைமிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முயற்சிக்கப் போவதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

பெர்னாண்டஸ் பேச்சு:

விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்கலந்து கொண்டார். அவர் பேசுகையில்,

2000 ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையைத் தாண்டி கணவாய்கள் மூலமாக இந்தியாவுக்குள் ஏராளமானோர்ஊடுறுவினர். ஆரம்பகால ஊடுறுவல்களின்போது 200 குதிரைகளுடன் வந்தவர்கள் இங்கு ஜாதிய முறைகளைத்தொடங்கினர்.

தங்களுக்குரிய அரசாங்கத்தை ஏற்படுத்தினர். தங்களுக்குக் கீழ் தான் மற்றவர்கள் என்ற சட்டத்தை வகுத்தனர்.இவர்களை விரட்டியடிக்க இன்னொரு கும்பல் ஊடுறுவியது. இப்படியாக உருவானதுதான் நமது பாரத சமுதாயம்.

இன்று வரை நாம் ஜாதிகளின் மோதலுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறோம். இதில் அதிகம் பாதிக்கப்படுவது,தலித்துகளும், நலிவடைந்த பிரிவினரும்தான்.

தலித் மக்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்.அப்போதுதான் அரசியலிலும் சரி, சமூகத்திலும் சமபலம் வாய்ந்த ஜாதிகளையும், பண பலத்தையும் எதிர்த்துப் போராட முடியும் என்றார் பெர்னாண்டஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+