வாஜ்பாய்க்கு எதிராக அத்வானி சூழ்ச்சி: கருணாநிதி
சென்னை:
பிரதமர் வாஜ்பாய்க்கு எதிராக பா.ஜ.கவில் சூழ்ச்சி வலை பின்னப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
பா.ஜ.கவில் வேறு யாரோ ஒருவர் பிரதமர் பதவிக்காக வெகு வேகமாக காய்களை நகர்த்தி வருகிறார்.
அதனால்தான், நாடு குழப்பமான நிலையை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்றும், அதை தடுத்து நிறுத்தவேமீண்டும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்றும் வாஜ்பாய் மும்பையில் பேசியுள்ளார். வாஜ்பாய்கூறியிருப்பது சாதாரண வாக்கியமல்ல. தன்னைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் சூழ்ச்சி வலையை அவர் புரிந்துகொண்டார் என்பதை விளக்கும் சாசனமாகும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் எனக்கும் மனஸ்தாபம் எதுவும் கிடையாது. மன தாபம் தான்இருக்கிறது. தாபம் என்றால் தாகம் என்று பொருள். அந்த மன தாபம் இருப்பதால்தான் கடந்த இரண்டுவாரங்களில் இரண்டு முறை சந்தித்து இரண்டரை மணி நேரம் உரையாடியிருக்கிறோம் என்றார்.
பா.ஜ.கவின் முரண்பாடுகள்:
இதற்கிடையே, பா.ஜ.கவின் முரண்பாடுகள் குறித்து முரசொலியில் கருணாநிதி எழுதியுள்ளார். பிரதமர் வேட்பாளர்யார் என்று காங்கிரசைப் பார்த்து கேள்வி கேட்கும் பா.ஜ.க, கர்நாடகத்தில் முதல்வருக்கான வேட்பாளர் யார்என்பதை அறிவிக்காதது ஏன் என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகத்தில் முதல்வருக்கான வேட்பாளராக அம் மாநில பா.ஜ.க. தலைவர் அனந்தகுமார் அறிவிக்கப்படுவார்என்று கூறப்பட்டது. ஆனால், அங்கு சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்பதால் தெற்குபெங்களூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துவிட்டார்.
இது தொடர்பாக முரசொலியில் கருணாநிதி எழுதியிருப்பதாவது:
பிரதமர் வேட்பாளர் யார் என்று பா.ஜ.கவில் உள்ள ஒவ்வொருவரும் காங்கிரஸைப் பார்த்து கேட்கிறார்கள்.ஆனால் கர்நாடகத்தில் பா.ஜ.க. வென்றால் யார் முதல்வர் என்று கேட்டால் மட்டும் மெளனமாகி விடுகிறார்கள்.திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தருவதாக தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகம் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.
இந்தியாவுடன் பாகிஸ்தான் இணையும் என்று இல.கணேசன் கூறியுள்ளார். அதற்கான சூழ்நிலைகளை பாஜகவால்மட்டுமே ஏற்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார். முதலில் பங்களாதேஷ் பாகிஸ்தானோடு இணைய வேண்டும்.அதன் பின்னர்தானே பாகிஸ்தான் இந்தியாவுடன் இணைய முடியும்?. அதற்கு இல.கணேசன்களும் பா.ஜ.கவும்என்ன செய்யப் போகின்றன என்று கேட்டுள்ளார் கருணாநிதி.
அந்தமானில் காங்கிரசுக்கு ஆதரவு:
வரும் மக்களவைத் தேர்தலில் அந்தமான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க திமுகமுடிவெடுத்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது திமுக பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது. அந்தமான் தலைநகர் போர்ட்பிளேர் நகராட்சி அதிகாரம் திமுகவின் கையில் உள்ளது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications