தலித்துகள் ஒன்றிணைய பெர்னாண்டஸ் கோரிக்கை
சேலம்:
தலித் சமுதாயத்தினர் எப்போதும் ஒற்றுமையாக இருந்தால்தான் ஜாதி பலம், பண பல அரசியலை எதிர்த்துப்போராடி வெற்றி பெற முடியும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
சேலம் நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இந்துத்வா கொள்கை எதிர்ப்பு மாநாடு நடந்தது. போஸ்மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், 2000ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையைத் தாண்டி கணவாய்கள் மூலமாக இந்தியாவுக்குள் ஏராளமானோர்ஊடுறுவினர். ஆரம்பகால ஊடுறுவல்களின்போது 200 குதிரைகளுடன் வந்தவர்கள் இங்கு ஜாதிய முறைகளைத்தொடங்கினர்.
தங்களுக்குரிய அரசாங்கத்தை ஏற்படுத்தினர். தங்களுக்குக் கீழ் தான் மற்றவர்கள் என்ற சட்டத்தை வகுத்தனர்.இவர்களை விரட்டியடிக்க இன்னொரு கும்பல் ஊடுறுவியது. இப்படியாக உருவானதுதான் நமது பாரத சமுதாயம்.
இன்று வரை நாம் ஜாதிகளின் மோதலுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறோம். இதில் அதிகம் பாதிக்கப்படுவது,தலித்துகளும், நலிவடைந்த பிரிவினரும்தான்.
தலித் மக்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்.அப்போதுதான் அரசியலிலும் சரி, சமூகத்திலும் சமபலம் வாய்ந்த ஜாதிகளையும், பண பலத்தையும் எதிர்த்துப் போராட்டியும்.
தமிழகத்தில் மக்கள் கூட்டணிக்கு ஐக்கிய ஜனதாதளம் ஆதரவு தெரிவிக்கிறது. அதற்காக நாங்கள் பா.ஜ.கவைஎதிர்க்கிறோம் என்று அர்த்தம் கிடையாது என்றார் பெர்னாண்டஸ்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சோனியா காந்தி பிரதமராக வருவதை நாங்கள் எதிர்க்கவில்லை.ஆனால் சோனியாவைத் தவிர வேறு யாரையும் பிரதமராக அறிவிக்க காங்கிரஸ் தயங்குவது ஏன் என்பதுதான்எங்களது கேள்வி என்றார்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications