கரூர்: 65ஐ திருமணம் செய்த 76
கரூர்:
அன்பு பிப்டி, சிக்ஸ்டி ஆன போதும் மலரும் என்ற அவ்வை சண்முகி பாடலை மெய்ப்பிக்கும் விதமாக, கரூரில் 76வயது முதியவர் ஒருவர் 65 வயது மூதாட்டியை திருமணம் செய்து கொண்டார்.
கரூரைச் சேர்ந்த கோதண்டபாணி-விஜயலட்சுமிதான் அந்த இளமைத் தம்பதியர். மகன்கள்-மருமகள்கள்,மகள்கள்-மருமகன்கள், பேரக்குழந்தைகளும் புடை சூழ கரூர் பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் திருமணம்செய்து கொண்டனர்.
திருமணம் குறித்து கோதண்டபாணி கூறியதாவது: பிள்ளைகள் என்னை ஒதுக்கினார்கள் என்பதற்காக நான்திருமணம் செய்யவில்லை. அவர்கள் இப்போதும் என்னை ஆதரிக்கிறார்கள். 1993ல் எனது மனைவி இறந்தாள்.அவளது மரணத்தால் அதிர்ச்சியடைந்த நான் தற்கொலை செய்ய முயற்சித்தேன். அப்போது என்னைக்காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் எனக்கு தைரியமும், ஆதரவும் கொடுத்தவர்தான் விஜயலட்சுமி.
முதலில் எங்களிடம் இருந்ததது வெறும் நட்புதான். பின்புதான் அது காதலானது என்றார்.
பட்டுப் புடவையில் இருந்த மணமகள் விஜயலட்சுமி கூறியதாவது: எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 2வதுகுழந்தை பிறந்தபின்பு கணவர் என்னை விட்டுப் பிரிந்துவிட்டார். குழந்தைகளைக் கஷ்டப்பட்டு வளர்த்து நல்லநிலைமைக்கு ஆளாக்கியுள்ளேன்.
கோதண்டபாணியை தற்கொலையிலிருந்து காப்பாற்றினேன். முதலில் நாங்கள் நண்பர்களாகத்தான் இருந்தோம்.பின்பு காதலர்களாக மாறினோம். கடந்த 9 வருடங்களாக இருவரும் சேர்ந்துதான் வாழ்ந்து வருகிறோம். சமூகத்தில்உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் எனபதற்காகத் தான் முறைப்படி கல்யாணம் செய்ய முடிவெடுத்தோம்என்றார்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications