காங்கிரஸ் விவகாரம்: 15 எம்எல்ஏக்களுடன் வாசன் ஆலோசனை- டெல்லிக்கு ஓடிய ப.சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வரும் 31ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழககாங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் பட்டியல் வெளியாவது தாமதமாவதால் தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் அதிருப்திஎழுந்துள்ளது. கோஷ்டிப் பூசலும் அதிகரித்து வருகிறது.

10 இடங்களில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் கட்சியின் 2 வேட்பாளர்களின் பெயர்களை கட்சி மேலிடம் சிலவாரங்களுக்கு முன்பு அறிவித்தது. ஆனால் மற்ற 8 பேர் யார் என்பதில்தான் பெரும் குழப்பம் நிலவுகிறது.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கமல்நாத்தின் தன்னிச்சையான வேட்பாளர் பட்டியலை ஜி.கே.வாசன் நிராகரித்துவிட்டார். அத்தோடு நில்லாமல் கமல்நாத் சொல்லும் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தினால் கட்சி அழிந்து விடும்என்றும் அவர் ஆவேசமாக கூறி விட்டு சென்னை வந்து விட்டார்.

15 எம்எல்ஏக்களுடன் வாசன் ஆலோசனை:

இதனால் கட்சி மேலிடம் வேட்பாளர் பட்டியலை மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வாசன்ஆதரவாளர்கள் சிலரை புதிய பட்டியலில் இணைக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

இந் நிலையில் நேற்றிரவு தனது இல்லத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 15 பேரையும் அழைத்து வாசன்ஆலோசனை நடத்தினார். அப்போது ப.சிதம்பரத்துக்கு காங்கிரசில் சீட் கொடுக்க அனைவருமே எதிர்ப்புத்தெரிவித்தனர். சிலர் பதவி விலகுவோம் என்றும் கூறினர். இதை தலைமையில் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகவாசன் உறுதியளித்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த வாசன், வருகிற 31ம் தேதி தமிழக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். எங்களைக் கலந்து பேசிதான்அந்தப் பட்டியல் உருவாக்கப்படும் என்று நம்புகிறேன். மேலிடம் அழைத்தால் டெல்லி செல்வேன்.

திமுக தலைவர் கருணாநிதி பிரச்சாரத்துக்கு அதிகளவில் கூட்டம் கூடுகிறது. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின்பேச்சுக்கு கூட்டம் இல்லை. இதிலிருந்தே எங்கள் வெற்றி உறுதியாகிறது என்றார்.

இதையடுத்து 31ம் தேதிக்கு முன் வாசனை சோனியா அழைத்துப் பேசுவார் என்று தெரிகிறது.

இளங்கோவன் கோபம்:

வாசன் நிர்பந்தத்துக்குப் பணிந்து தனது ஆதரவாளர்களை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கினால் தாங்கள்அதை ஏற்க மாட்டோம் என்று இளங்கோவன் ஆதரவாளரான தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர்கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.

கட்சியின் இந்தக் குழப்பத்திற்கு வாசன்தான் காரணம். வேட்பாளர் தேர்வில் அவர் தலையிடாமல் இருந்தாலேபிரச்சினை வராமல் இருந்திருக்கும் என்று அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

ப.சிதம்பரம் டெல்லி விரைவு:

இதற்கிடையே வாசன் எதிர்ப்பு காரணமாக, வேட்பாளர் பட்டியலை மாற்றி அறிவிக்கும்போது தனக்குஒதுக்கப்பட்ட சிவகங்கையைப் பறித்துவிடுவார்களோ என்று கலங்கிப் போயுள்ள ப.சிதம்பரம் டெல்லிவிரைந்துள்ளார்.

இன்று அவர் சோனியாவை சந்திக்கலாம் என்று தெரிகிறது. சிதம்பரத்துக்கு சீட் தர கட்சியில் எதிர்ப்பு அதிகமாகஇருப்பதால், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை இணைத்தால் தான் சீட் என அப்போது சோனியா நிர்பந்தம்விதிக்கலாம் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

அதிருப்தியில் வன்னியர்கள்:

இதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளர்களில் ஒருவர் கூட வன்னியர்கள் இல்லை என்பதால் அந்த சமூகத்தினர்கடுப்படைந்துள்ளனர்.

குறிப்பாக சேலம் தொகுதியில் வன்னியர் அல்லாத தங்கபாலுவுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளதை அவர்களால்ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+