மதுரை உயர் நீதிமன்ற கிளையை எதிர்த்து சென்னை வழக்கறிஞர்கள் போராட முடிவு
சென்னை:
மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை திறக்கப்படுவதையும், அதிமுக அளவிலான மாவட்டங்களை மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு ஒதுக்குவதையும் கண்டித்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையை தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று மதுரையில்அமைக்க திமுக ஆட்சிக் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மதுரை உலகநேரியில் கட்டுமானப் பணிகளும்தொடங்கின.
தற்போது கட்டுமானப் பணிகள் முடிவடைந்து கிளை தயாராக உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 13ம் தேதி உயர்நீதிமன்றக் கிளை திறக்கப்படும் என்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இந் நிலையில் மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தற்போதும் தனது எதிர்ப்பை தீவிரப்படுத்தியுள்ளது. மதுரையில் உயர் நீதிமன்றக்கிளையை திறப்பதையும், மதுரைக்கு அதிக அளவிலான மாவட்டங்களை ஒதுக்கியுள்ளதையும் எதிர்த்து பலவழிகளில் போராடப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சங்கக் கூட்டத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து சங்கத் தலைவர் பிரபாகரன்கூறுகையில், மதுரையில் உயர் நீதிமன்றக் கிளையை உடனடியாக திறக்கக் கூடாது. மத்தியில் புதிய அரசு வரும்வரை காத்திருந்து அதன் பின்னர்தான் திறக்க வேண்டும்.
மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு ரிட் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் வழங்கக் கூடாது. அப்படிவழங்கப்பட்டால் அது சென்னை உயர் நீதிமன்றத்தைப் பாதிக்கும்.
மதுரைக்கு அதிக மாவட்டங்களை ஒதுக்கியுள்ளார்கள். இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவேமதுரைக்குக் குறைவான மாவட்டங்களையே ஒதுக்க வேண்டும்.
சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை ஏப்ரல் 13ம் தேதியன்று திறக்கப்படுவது உறுதி என்று உயர் நீதிமன்றம்திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சென்னை வழக்கறிஞர்களின் போராட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications