தேர்தலில் போட்டியிடாதது ஏன்?: வைகோ விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

ஜெயலலிதா அரசுக்கு எதிராக தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என்பதற்காகத் தான் நான் மக்களவைத் தேர்தலில்போட்டியிடவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

மதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று கோவையில் வெளியிடப்படுகிறது. பீளமேடு பகுதியிலுள்ள சுகுணாமண்டபத்தில் வைகோ அதை வெளியிடுகிறார். மாலையில் அவர் திண்டுக்கல் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.

இன்று கோவையில் நிருபர்களிடம் பேசிய வைகோ,

ஜெயலலிதாவின் அடக்குமுறை ஆட்சியில் மக்கள் பல துயரங்களை அனுபவித்துவிட்டார்கள். இதனால் எனதுநேரம் முழுவதையும், சக்தி முழுவதையும் ஜெயலலிதாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் செலவிட முடிவு செய்தேன்.நானும் தேர்தலில் போட்டியிட்டால் அது முடியாது என்பதால் தான் போட்டியிடவில்லை.

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெரும். ஜெயலலிதாவுக்கு அது மரண அடியாக இருக்கும்.இந்து மத வெறி சக்திகளிடம் சிக்கிவிட்டார் வாஜ்பாய். இதனால் அவரை இனிமேல் எந்தக் காலத்திலும் ஆதரிக்கமாட்டோம் என்றார்.

கோவை பீளமேடு பகுதியிலுள்ள சுகுணா மண்டபத்தில் வைகோ தேர்தல் அறிக்கையை வெளியிட மதிமுகஅரசியல் ஆலோசனைக் குழு செயலாளர் துரைசாமி அதை பெற்றுக் கொள்கிறார். இக் கூட்டத்தில் கட்சியின்பொருளாளர் கண்ணப்பன், வந்தவாசி தொகுதி மதிமுக வேட்பாளர் செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட கட்சிப்பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

இன்று இரவு திண்டுக்கல்லி நடக்கும் பொதுக் கூட்டத்தில் வைகோ பேசுகிறார். நேற்று வந்தவாசி தொகுதிவேட்பாளர் செஞ்சி ராமச்சந்திரனை ஆதரித்து பிரச்சாரம் செய்த வைகோ கூறியதாவது:

கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு குரல் கொடுக்க சொன்னார் அண்ணாதுரை. அவர் சொன்னதை தான்செய்தேன். ஆனால் பொடா சட்டத்தில் என்னைக் கைது செய்தார் ஜெயலலிதா.

இன்னும் ஏழு ஆண்டுகள் சிறையில் போட்டாலும் யாரிடமும் மண்டியிட மாட்டேன். இந்த உடலும், உயிரும்இருப்பது தமிழ் மக்களுக்காகத் தான். நான் சிறையில் இருந்தபோது மதிமுகவினர் ஏதாவது அசம்பாவிதத்தில்ஈடுபட்டார்களா?

ஆனால், ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தவுடன் தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் 3கல்லூரி மாணவிகள் தீவைத்து கொளுத்தப்பட்டனர். இதற்குக் காரணமான ஜெயலலிதா தமிழக முதல்வராகஇருக்கலாமா?

பழனியில் உள்ள நவபாஷாண சிலையை தங்க விக்கிரகத்தால் மூடி, மறைக்க வேண்டும் என்று மலையாளமாந்திரீகர் சொன்னாராம். அதைக்கேட்டு அதற்கேற்ப ஜெயலலிதா செயல்பட்டுள்ளார். ஒரு கோயிலில் உள்ளமூலவர் விக்கிரகத்தை மறைத்தால், அந்த நாட்டிலுள்ள அரசு அழியும். அதற்கு காரணமானவர்கள் பெரும் நோய்வந்து இறப்பர் என்று திருமூலர் சொல்லி இருக்கிறார் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+