இன்னும் "உயிருடன்" உள்ள த.மா.கா!
டெல்லி:
மூப்பனார் ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் உள்ளது.
அதே நேரத்தில், பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகாரம் வழங்கப்படாத கட்சி என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.
நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது அதிமுகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இதை கண்டித்துகட்சியை உடைத்துக் கொண்டு வெளியே வந்த மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.
திமுகவுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
பின்னர் காலப்போக்கில் தமாகவுக்கும், திமுகவுக்கும் விரிசல் ஏற்பட்டது. அதிமுகவுடன் போய்ச் சேர்ந்தார் மூப்பனார். அதைக்கண்டித்து ப.சிதம்பரம் வெளியேறி காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியைத் தொடங்கினார்.
மூப்பனார் மறைவுக்குப் பின்னர் தமாகாவை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் அவரது மகன் வாசன். த.மா.காவை கலைத்துவிட்டதாகவும் அறிவித்தார்.
இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட பட்டியலில் தமாகா தொடர்ந்து உள்ளது. இருப்பினும் இக்கட்சிக்குஅங்கீகாரம் வழங்கப்படாத கட்சி என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சமீபத்தில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் இணைந்த சமதா கட்சியும் (ஜார்ஜ் பெர்னாண்டஸின் கட்சி) பதிவுசெய்யப்பட்ட அங்கீகக்கப்படாத கட்சியாக தேர்தல் ஆணைய பட்டியலில் உள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தியில் உள்ள வாசனின் தீவிர ஆதரவாளர்கள் சிலர், அவரை மீண்டும் த.மா.காவுக்குஉயிர் கொடுக்கும்படி நச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்!












Click it and Unblock the Notifications