கையை பிசையும் காங்கிரசார்... கோபத்தில் கூட்டணியினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சோனியாவுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா மிகக் கடுமையான பிரசாரம் செய்து வரும் நிலையில், இன்னும் வேட்பாளர்களைஅறிவிக்கததால், காங்கிரஸ் கட்சியினர் பிரசாரத்தையே தொடங்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 2வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். ஆனால் 8 தொகுதிகளின் வேட்பாளர்கள் குறித்து குழப்பம் நிலவுகிறது.

இதனால் காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாது திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் கூட விரக்தியடைந்துள்ளனர். தேர்தல்பணிகளை மேற்கொள்ள முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர். மாறாக, அதிமுக, பா.ஜ.க. தரப்பு படு சுறுசுறுப்பாக பிரசாரப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

திமுகவைப் பொருத்தவரை அதன் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு, பிரசாரம் தொடங்கி விட்டது. கருணாநிதி பாதிதமிழ்நாட்டை வலம் வந்து விட்டார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பாமக நிறுவனர் ராமதாஸ் ஆங்காங்கேபிரசாரத்தில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அதேபோல கம்யூனிஸ்ட் தலைவர்கள் சங்கரய்யா, நல்லகண்ணு ஆகியோரும்பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். ஆனால் காங்கிரஸ் தரப்பில் இன்னும் பிரசாரம் தொடங்கப்படவில்லை.

இதன் காரணமாக திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள், காங்கிரஸுக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகளில் பிரசாரம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் யார் என்று தெரியாமல், சும்மானாச்சுக்கும் பிரசாரம் செய்ய தலைவர்கள்விரும்பாததால், அந்தத் தொகுதிகளை தவிர்த்துவிட்டு வேறு தொகுதிகளில் அவர்கள் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை பலம் வாய்ந்த தலைவராக தற்போதைய காங்கிரஸ் தலைவர் இல்லாததால்தான் இந்த நிலைமைஎன்று காங்கிரஸ் கட்சியினர் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதுவே இளங்கோவனாக இருந்திருந்தால் நிலைமை வேறு மாதிரியாகஇருந்திருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

திமுக கூட்டணி இப்படியிருக்க, ஜெயலலிதா பிரசாரத்தில் கலக்கி வருகிறார். காங்கிரஸ் போட்டியிடும் பழனி, ராசிபுரம், சேலம்ஆகிய தொகுதிகளில் அவர் பிரசாரத்தை முடித்து விட்டார். அங்கெல்லாம் அதிமுகவினரும், பா.ஜ.கவினரும் தற்போது தீவிரத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் காங்கிரஸார் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர்.

இதை விடக் கூத்து என்னவென்றால் காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் டார் டாராக கிழித்துப்போட்டுக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. ஆனால் இதை எதிர்த்துப் பிரசாரம் செய்ய ஒரு காங்கிரஸ் தலைவரைக் கூடகாணவில்லை. மாறாக, கருணாநிதி, ராமதாஸ், சங்கரய்யா போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள்தான் சோனியாவைவிமர்சிக்கும் ஜெயலலிதாவுக்குப் பதிலடி கொடுத்து பேசி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+