இரட்டை இலைக்கு வாக்கு கேட்கும் "இரட்டை மலைகள்"
சென்னை:
தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் பதர் சயீதுக்கு ஆதரவாக குண்டு நடிகர்கள் சகாதேவன், மகாதேவன்வாக்கு சேகரித்தனர்.
தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பதர் சயீதுதை ஆதரித்து ஏராளமான நடிகர்கள் வாக்கு சேகரித்துவருகின்றனர். ராதாரவி மேற்பார்வையில், குண்டுமணி, குள்ளமணி, வாசுகி, சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதே வரிசையில் தற்போது குண்டு நடிகர்களான இரட்டையர்கள் சகாதேவன், மகாதேவன் ஆகியோரும் பதர்சயீதுக்காக ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர். சிறு வயது முதல் நடிப்பில் "கலக்கி" வரும் இந்த குண்டுஇரட்டையர்கள், கையில் அதிமுக கொடியுடன், இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுமாறு கேட்டு வருகிறார்கள்.
தி.நகரில் ஜன நெரிசல் நிறைந்த பகுதியில் இவர்கள் அசைந்து அசைந்து நடந்து ஓட்டு சேகரித்தபோதுபொதுமக்கள் இவர்களை ரசித்துப் பார்த்தனர். இரட்டை இலைக்கு வாக்கு கேட்கும் இரட்டை மலைகள் எனவும்கமெண்ட் அடித்தனர்.
பச்சை நிறமே.. பச்சை நிறமே...
நாளை அரக்கோணத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக வரும் ஜெயலலிதாவை அசத்தி விட வேண்டும்என்பதற்காக எங்கு பார்த்தாலும் பச்சை நிறமாக இருக்கும் வகையில், அரக்கோணத்தையே பச்சைமயமாக மாற்றியுள்ளனர் அதிமுகவினர்.
விளக்குக் கம்பங்களில் கூட பச்சை பெயிண்ட்டை அடித்து கலக்கியுள்ளார்கள். "அம்மா"வைவரவேற்பதற்காக பச்சை கம்பள விரிப்பும் காத்துள்ளது. புதிய சாலைகள் போடப்பட்டு அனைத்துஏற்பாடுகளும் முடிந்துள்ளன. அம்மா "அப்செட்" ஆகி விடாமல் இருப்பதற்காக கூட்டம் சேர்க்கும்வேலைகளும் கச்சிதமாக நடக்கின்றன.
கூட்டத்துக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கட்டாயம் வர வேண்டும் என்றும், பச்சைபுடவையில் வர வேண்டும் என்றும் ஆர்டர் போடப்பட்டுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி!












Click it and Unblock the Notifications